Tamil Cinema News
முதல் சிங்களலியே சம்பவம் செய்த சந்தானம்… டிடி நெக்ஸ் லெவல்..! முதல் சிங்கிள் வெளியானது.!

நடிகர் சந்தானம் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து அவர் நடிக்கும் காமெடி திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு கிடைத்திருந்தது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடி திரைப்படங்கள் என்பது அவ்வளவாக பெரிதாக வருவதில்லை.
அதனாலேயே இப்போதைய காலக்கட்டங்களில் சந்தானத்தின் படங்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அப்படியாக சந்தானம் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் தில்லுக்கு துட்டு.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வருகிற மற்ற பாகங்களும் தொடர்ந்து வெற்றியை கொடுத்து வருகின்றன.
அப்படியாக அடுத்து சந்தானம் நடித்து வரும் திரைப்படம் டிடி நெக்ஸ் லெவல். இந்த திரைப்படத்தில் சந்தானம் திரைப்பட விமர்சகராக வருகிறார். அது தொடர்பாக முதல் சிங்கிள் முதலில் வெளியானது. அந்த முதல் சிங்கிள் பாடலே அதிக வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீனிவாசா கோவிந்தா பாடலை பின்புலமாக கொண்டு இந்த பாடல் அமைந்துள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.