Connect with us

கடவுள் படத்தில் நடித்ததால் நடந்த அதிசயம்… மனமுருகி கூறிய டெல்லி கணேஷ்!..

delhi ganesh

Cinema History

கடவுள் படத்தில் நடித்ததால் நடந்த அதிசயம்… மனமுருகி கூறிய டெல்லி கணேஷ்!..

cinepettai.com cinepettai.com

Delhi Ganesh: கடவுள் படங்களில் நடித்ததன் மூலமாக நன்மைகள் கிடைக்குமா என்பது உண்மையில் தெரியவில்லை. ஆனால் தனக்கு அப்படியான ஒரு சம்பவம் நடந்ததாக நடிகர் டெல்லி கணேஷ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒருமுறை படப்பிடிப்பிற்காக ஒரு கிராமத்திற்கு சென்று இருக்கின்றனர்.

அது ஒரு குறைந்த பட்ஜெட் படமாகும் பொதுவாக டெல்லி கணேசை பொருத்தவரை அவருக்கு சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தால் கூட எந்த படமாக இருந்தாலும் அதில் நடிப்பார். அப்படியாக அந்த படத்தில் நடிப்பதற்காக சென்றுவிட்டார்.

ஆனால் அந்த கிராமத்தில் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வது கூட கடினம் என்கிற நிலை இருந்தது. முக்கியமாக சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டமான நிலை என்கிற நிலை இருந்தது. இந்த நிலையில் சினிமாக்காரர்கள் கொண்டு வந்த உணவு டெல்லி கணேசுக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

சரி என்னதான் செய்வது என்று கடவுளை வேண்டிக் கொண்டு அவர் அமர்ந்திருந்தபோது அவரைத் தேடி ஒரு நபர் வந்தார். வந்தவர் நீங்கள் டெல்லி கணேஷ் தானே என்று கேட்டிருக்கிறார். ஆமாம் என்று அவர் கூறவும் ராகவேந்திரா திரைப்படத்தில் நீங்கள் நடித்த அப்பனாச்சாரியார் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

சார் உங்களை நான் ராகவேந்திரா ஆகவே பார்க்கிறேன் எங்கள் வீட்டிற்கு ஒரு முறை வந்து உணவு உண்ண முடியுமா என்று கேட்டுள்ளனர். அப்போது மிகவும் பசியில் இருந்த டெல்லி கணேஷ் உடனே அதற்கு ஒப்பு கொண்டு வாங்கி சென்றிருக்கிறார்.

அவருக்கு வடை பாயாசம் என்று தடபுலாக விருந்து வைத்து அனுப்பி இருக்கின்றனர். அவர் அனுப்பும் போது கூட ராகவேந்திரா தெய்வமே எனது வீட்டிற்கு வந்து சாப்பிட்டதாக நான் நினைக்கிறேன் என்று கூறி டெல்லி கணேசை அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்த ராகவேந்திரா தான் டெல்லி கணேசுக்கு உணவளித்ததாக டெல்லி கணேசன் நம்பினார் இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

POPULAR POSTS

kota srinivasa rao
santhanam sundar c
manikandan kavin
karathe raja prakash raj
To Top