Connect with us

அந்த படத்தை பார்த்தா வாந்திதான் வருது!.. ராதிகாவுக்கு எரிச்சலூட்டிய திரைப்படம்!..

tamil actress radhika

Latest News

அந்த படத்தை பார்த்தா வாந்திதான் வருது!.. ராதிகாவுக்கு எரிச்சலூட்டிய திரைப்படம்!..

Social Media Bar

Actress Radhika : தமிழ் திரை பிரபலங்களில் வெகு நாட்களாக திரையில் இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் ராதிகா. இப்போது இருக்கும் நடிகைகள் எல்லாம் ஒன்று இரண்டு படங்களில் நடித்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுகின்றனர்.

தமிழில் இந்த மாதிரி எக்கச்சக்கமான கதாநாயகிகள் சில படங்கள் மட்டும் நடந்து நடித்துவிட்டு காணாமல் போய்விட்டனர். ஆனால் ராதிகா கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அது இல்லாமல் அரசியலிலும் அவர் ஈடுபாடு காட்டி வருகிறார் ராதிகா. பொதுவாக திரைப்படம் குறித்து விமர்சனங்களோ கருத்துக்களோ அவர் கூறியது கிடையாது. அரசியல் சார்ந்து சமகாலத்தில் நடக்கும் சில நிகழ்வுகள் குறித்து பேசுவாரே தவிர சினிமா குறித்து பெரிதாக சமூக வலைத்தளங்களில் பேச மாட்டார்.

அப்படியே கூறினாலும் அது மற்றவர்கள் கருத்து என்று விட்டுவிடக்கூடியவர் ஆனால் அவரே இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதோ ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு அந்த திரைப்படத்தை பார்க்கவே முடியவில்லை வாந்தி எடுக்கத்தான் வருகிறது என மிக நேரடியாக எழுதி இருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

இது எந்த படமாக இருக்கும்  என்கிற கேள்விதான் தற்சமயம் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்சமயம் ஓடிடியில் வெளியான ஏதோ ஒரு படம் தான் என்று முடிவு செய்தனர் ரசிகர்கள். அப்படி பார்க்கும் பொழுது ஃபைட்டர் திரைப்படமும் ஹிந்தி திரைப்படமான அனிமல் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகி இருந்தது.

அதிகபட்சம் அனிமல் திரைப்படத்திற்க்கான விமர்சனமாக தான் இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த திரைப்படம் வெளியான பொழுது தென்னிந்தியாவில் இந்த திரைப்படம் அதிகமான விமர்சனத்திற்கு உள்ளானது. எனவே அந்த திரைப்படத்தைதான் ராதிகா கூறுகிறார் என்பது ரசிகர்களின் அனுமானமாக உள்ளது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top