மைனாவையும் சிவினையும் என்ன செய்யுறேன் பாருங்க –  போட்டியில் இறங்கிய தனலெட்சுமி!

பிக்பாஸில் எப்படியாவது ஒரு வாரமாவது தலைவராக வேண்டும் என ஆசையில் இருக்கிறார் தனலெட்சுமி. இதனால் நேற்று தலைவர் ஆவதற்கான போட்டி நடந்தபோது அதில் எப்படியாவது ஜெயிக்க நினைத்தார்.

ஆனால் மைனா ஜெயித்து இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தனலெட்சுமி மிகவும் கோபமடைந்தார். ஏற்கனவே யார் யார் எந்த குழுவில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விளையாடுகிறார்கள் என மற்றவர்கள் மீது குற்றம் சாட்டி வந்தார் தனலெட்சுமி.

இதனால் அனைத்து டீம்களையும் மாற்றி அமைத்தார் மைனா. இதற்காக நீதிமன்றம் போல செட் அமைத்து தனலெட்சுமிக்கு சாட்சியாக பேச மைனா மற்றும் சிவினை அழைத்தனர். ஆனால் அவர்கள் இருவரும் வருவதற்கு மறுத்துவிட்டனர்.

ஏனெனில் அதற்கு முதல் நாள்தான் தனலெட்சுமி சிவின், மைனா இருவரிடமும் சண்டை போட்டிருந்தார். இந்த நிலையில் அடுத்து என்ன விளையாட்டு எப்படி இருக்கும் பாரு? என சவாலாக கூறியுள்ளார் தனலெட்சுமி.

Refresh