Bigg Boss Tamil
எல்லா வாரமும் என்னையவே டார்கெட் பண்றீங்க – எரிமலையாய் குமுறிய தனம்
பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற மொழிகளை விடவும் தமிழில்தான் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் எப்போதும் சண்டை மட்டுமே போடும் போட்டியாளர்களாக இந்த வருட போட்டியாளர்கள் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக தனலெட்சுமி மற்றும் அசிம் இருவருமே உடனே கோபப்பட கூடியவர்களாக இருக்கின்றனர். ஏற்கனவே போன வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற விளையாட்டில் தனலெட்சுமிக்கும் அசீமிற்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து அசிம் மேல் தவறு இருப்பதை அறிந்த கமல் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் இந்த வாரம் துவங்கி இரண்டே நாட்கள் ஆன நிலையில் மறுபடியும் தனலெட்சுமிக்கும் அசிமிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
டிவிட்டரில் இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
தொடர்ந்து அசிமிற்கு எதிராக கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் அவர் இப்படி சண்டை போட்டு கொண்டிருப்பது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
