இளையராஜா படத்தில் நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்!. அதுக்குன்னு இவ்வளவா?..

Ilayaraja and Dhanush: தமிழில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக தனுஷ் இருந்து வருகிறார். வாத்தி மற்றும் நானே வருவேன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த தனுஷ் அடுத்து இறுதியாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படத்திற்கு போட்டியாக அமைந்தது. இரண்டு திரைப்படங்களுமே ஆவரெஜான வசூலைதான் பெற்றன. இந்த நிலையில் அடுத்து ராயன் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் தனுஷ்.

dhanush
dhanush
Social Media Bar

இந்த படத்திற்கு பிறகு புது பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய இரு திரைப்படங்களில் தனுஷ் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த இரு திரைப்படங்களுக்குமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

Dhanush Salary:

ஆனால் இதற்கு நடுவே ராயன் திரைப்படத்திற்கு பிறகு அடுத்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இளையராஜாவின் வாழ்க்கை கதையை படமாக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் ஆசையாகும்.

இந்த நிலையில் தனுஷ் அவரே தயாரித்து இந்த படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் தற்சமயம் சில காரணங்களால் தனுஷ் இந்த படத்தை தயாரிக்கவில்லை என கூறப்படுகிறது. அதே போல முதலில் மாரி செல்வராஜ்தான் இந்த படத்தை இயக்கவிருந்தார். ஆனால் இப்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

dhanush
dhanush

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்காக 50 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம் தனுஷ். இதற்கு முன்பு நடித்த எந்த ஒரு திரைப்படத்திலும் தனுஷ் இவ்வளவு சம்பளம் வாங்கவில்லை. பிறகு எதற்கு இப்போது 50 கோடி ரூபாய் கேட்கிறார் என்பதே தற்சமயம் பெரும் பேசு பொருளாக இருக்கிறது.

சினிமா வட்டாரத்தில் இதுக்குறித்து சில பேச்சுக்கள் உள்ளன. அதாவது தனுஷிற்கு பிறகு சினிமாவிற்கு வந்த சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களே தங்களது சம்பளத்தை உயர்த்திவிட்டனர். ஆனால் தனுஷ் மட்டும் இன்னும் குறைந்த சம்பளமே வாங்கி வருகிறார். எனவேதான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என பேசப்படுகிறது.