சனி பொணம் துணைக்கு போறது மாதிரி என்னைய கூப்புடுறீயா!.. அந்த படம் தேறாது!. தனுஷை மூஞ்சுக்கு நேராக கேட்ட அமீர்..
Aamir: தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு சொல்லும் படியாக சில இயக்குனர்கள் அவர்களின் படத்தின் மூலம் மக்களின் மனதில் இடத்தைப் பிடித்து விடுவார்கள்.
மேலும் சில இயக்குனர்கள் படங்கள் மட்டும் இயக்காமல், படத்திலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருவதை தற்பொழுது வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும், ஒரு புதிய பரிணாமத்தை மக்களுக்கு அவர்கள் தெரியப்படுத்துகிறார்கள். இதன் மூலம் இயக்குனராக மட்டும் பார்க்கப்பட்ட வந்த சிலர்கள் அவர்களின் நடிப்பு திறமையால் நடிகர்களாகவும் முடிவு எடுத்திருப்பது ஆச்சரியத்தையும் அளிக்கிறது.
அந்த வகையில் இயக்குனராக மட்டுமல்லாமல், நடிகராகவும் தற்பொழுது பல படங்களில் நடித்து வரும் இயக்குனர் அமீர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனுஷ் படத்தில் நடித்ததை பற்றி பகிர்ந்து உள்ளார்.
மாறன் படத்தில் இயக்குனர் அமீர்
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் தான் மாறன். இந்த படத்தைப் பற்றி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த பொழுது மாறன் திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.

வசூல் ரீதியாக இந்த படம் அமையவில்லை. மேலும் சாதாரண ஒரு கதைக்களத்தை கொண்ட படமாக தான் இருந்தது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு இயக்குனர் அமீர் ஒப்புக்கொண்ட தகவலை சுவாரசியமாக நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருப்பார்.
தனுஷிடம் நேரடியாக கேட்ட அமீர்
இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அமீர், தற்பொழுது பல படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் மாறன் திரைப்படத்தில் நடித்தது குறித்து அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு மாறன் திரைப்படத்தில் நடிப்பதற்கு துளியும் விருப்பம் இல்லை என கூறியிருந்தார்.

மேலும் அந்த படத்தின் கதையைக் கேட்ட பிறகும் எனக்கு அவ்வளவாக அந்த படத்தின் கதை பிடிக்கவில்லை. நடிகர் தனுஷ் தான் மீண்டும் மீண்டும் என்னை தொடர்பு கொண்டு இந்த படத்தில் நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும் என கேட்டார். நான்தான் அவரிடம் கேட்டேன் சனி பொணம் தனியா போற மாதிரி என்னையும் துணைக்கு கூப்பிடுறியா என்று நேரடியாக தனுஷிடம் விளையாட்டாக கேட்டேன்.
பிறகு அவர் சிரித்துக் கொண்டு ஏன் அண்ணா அப்படி எல்லாம் கூறுகிறீர்கள் எனக் கேட்டார். அவருக்காக தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என அமீர் கூறியிருக்கிறார்.