Connect with us

சாதி படம் எடுக்குறவங்கலாம் ஆபத்தானவங்க! – பா.ரஞ்சித் குறித்து பேசிய அமீர்..!

Cinema History

சாதி படம் எடுக்குறவங்கலாம் ஆபத்தானவங்க! – பா.ரஞ்சித் குறித்து பேசிய அமீர்..!

Social Media Bar

தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். தமிழில் இதுவரை இவர் நான்கு திரைப்படங்கள் இயக்கியுள்ளார். நான்கு திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். அதில் முக்கியமான திரைப்படம் பருத்திவீரன்.

பருத்திவீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் இவரை பிரபலமடைய செய்தது. ஆனால் அதற்கு பிறகு ஆதி பகவான் என்கிற படத்தை மட்டுமே இயக்கினார். தற்சமயம் தொடர்ந்து நடித்து வருகிறார். வட சென்னை படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பேட்டியில் சாதிய திரைப்படங்கள் குறித்து அமீரிடம் கேட்கப்பட்டது.

சாதிய திரைப்படங்களை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு அமீர் கூறும்போது “சாதிய திரைப்படங்களை இரண்டாக நாம் பார்க்க வேண்டும். பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் இயக்கும் படத்திற்கு ஆதரவு அளிக்கலாம்.

ஆனால் அதை தவிர்த்து தன் சுய சாதி பெருமை பேசும் படங்களை நாம் ஆதரிக்க முடியாது. 2000 ஆண்டுகளாக அடி வாங்கி வந்த பாதிக்கப்பட்ட மக்கள் அதை பேசுவது வேறு. ஆனால் என் சாதி பெருசு. வேற சாதி பையனை கல்யாணம் பண்ண கூடாதுன்னு படம் எடுக்குறதெல்லாம் மோசம். அந்த மாதிரியான படங்களை எடுப்பவர்கள் ஆபத்தானவர்கள்” என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

To Top