Latest News
என்ன கேட்காம எவண்டா என் பாட்டுல கை வச்சது!.. இயக்குனரால் கடுப்பான இளையராஜா..!
இளையராஜா இசையில் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான பாடல்கள் வந்துள்ளன. இசைக்கே தமிழில் அவர்தான அரசர் என்கிற ரீதியில் அவருக்கு சினிமாவில் அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஒரு காலக்கட்டத்தில் இளையராஜாவின் இசைக்காக திரைப்படங்கள் ஓடிய காலக்கட்டங்களும் உண்டு.
ராஜ்கிரண் கூட ஒரு பேட்டியில் கூறும்போது நான் நடிக்கும் திரைப்படங்களுக்கு பேனர் வைக்கும்போது அதில் இளையராஜாவின் போட்டோக்கள்தான் பெரிதாக இருக்கும் என கூறியுள்ளார். அப்படியான மக்கள் விரும்பும் நபராக இருந்தவர் இளையராஜா.
நடிகர் ராமராஜனின் திரைப்படங்களில் பல பாடல்களுக்கு இசையமைத்து ஹிட் அடிக்க செய்துள்ளார் இளையராஜா. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து ராமராஜன் மீண்டும் தற்சமயம் நடித்த திரைப்படம் சாமானியன். இந்த திரைப்படத்திற்கும் இளையராஜாதான் இசையமைத்து கொடுத்தார்.
இந்த படம் குறித்து சுவாரஸ்யமான அனுபவங்களை இயக்குனர் பகிர்ந்துள்ளார். சாமானியன் படத்தின் இசை வேளைகள் நடந்து கொண்டிருந்தப்போது அந்த திரைப்படத்தில் ஒரு பாடலை கொஞ்சம் ட்ரிம் செய்ய சொல்லிவிட்டு சென்றுள்ளார் இளையராஜா.
ஆனால் இயக்குனர் அந்த பாடலை கொஞ்சம் நகர்த்தி வைத்துவிட்டார். ஒரு இரண்டு நொடிகள் முன்னோக்கி நகர்த்தி வைத்துவிட்டார். அதனை சரியாக அடையாளம் கண்டுக்கொண்ட இளையராஜா யார் இதை மாற்றி வைத்தது என மிக சரியாக கேட்டுள்ளார். அந்த அளவிற்கு நுட்பமாக வேலை பார்ப்பவர் இளையராஜா என கூறியுள்ளார் இயக்குனர்.