விஷாலால் எனக்கு பட வாய்ப்பே போயிட்டு!.. லிவிங்ஸ்டன் வாழ்க்கையில் மண்ணை போட்ட விஷால்!.

தமிழில் செல்லமே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் விஷால். முதல் படத்திலேயே அவருக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. முக்கியமாக காமெடி கதைகள் அவருக்கு நன்றாக ஒத்து போனது. அதனை தொடர்ந்து மலைக்கோட்டை, தோரனை மாதிரியான திரைப்படங்களில் கொஞ்சம் காமெடி கதாபாத்திரமாக நடித்தார்.

தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் விஷால் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இடையில் பேட்டி ஒன்றில் விஷால் பேசும்போது குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் எல்லாம் தயவு செய்து சினிமாவிற்கு வந்துவிடாதீர்கள்.

ஏறகனவே ஏகப்பட்ட குறைந்த பட்ஜெட் படங்கள் வெளிவராமல் கிடக்கிறது என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதுக்குறித்து நடிகர் லிவிங்ஸ்டன் பேட்டியில் கூறும்போது விஷால் சொன்ன இந்த விஷயம் என்னை பெரிதாக பாதித்துவிட்டது.

நான் ஒரு படம் இயக்கி வருகிறேன். இந்த படத்தின் பட்ஜெட் ஒன்றரை கோடிதான். விஷாலின் பேச்சை கேட்ட என்னுடைய தயாரிப்பாளர் தற்சமயம் படத்திற்கு தயாரிக்க யோசிக்கிறார். இப்படி விஷால் பேசியது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார் லிவிங்ஸ்டன்