News
லியோ படத்தில் அந்த காட்சி முழுக்க தெலுங்கு பட காபியா?… உண்மை தெரியாமல் லோகேஷை திட்டும் ரசிகர்கள்!.
Leo vijay: தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தற்சமயம் வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லியோ திரைப்படம் படமாக்கப்பட்ட காலகட்டம் முதலே அந்த திரைப்படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.
அவற்றை எல்லாம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பூர்த்தி செய்வாரா? என்கிற கேள்வி பலரிடமும் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளை நிரப்பி வருகிறது.
இந்த திரைப்படத்தில் ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்கிற திரைப்படத்தின் தழுவலாக சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இதை லோகேஷ் கனகராஜ் படம் துவங்கும் பொழுதே படத்திலேயே தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் அதில் ஒரு காட்சியில் விஜய்யின் காபி கடையில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணை சீண்டுவதால் ஒரு கூட்டத்தை விஜய் கொல்வதாக காட்சிகள் இருக்கும்.

இந்த காட்சி கிட்டத்தட்ட அப்படியே ஒரு தெலுங்கு படத்தில் இருப்பதை பத்திரிகையாளர் பிஸ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த திரை ரசிகர்கள் பலரும் என்ன அந்த காட்சி அப்படியே காப்பி அடித்து படத்தில் வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் உண்மையில் அந்த காட்சி ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்னும் அந்த ஹாலிவுட் படத்தில் வரும் காட்சியாகும். படத்தின் இந்திய உரிமத்தை லோகேஷ் கனகராஜ் காசு கொடுத்து வாங்கிய பிறகு அந்த காட்சியை தனது படத்தில் வைத்துள்ளார்.
Twitter Link : https://twitter.com/jbismi_offl/status/1715999054667334075/video/1
ஆனால் அந்த தெலுங்கு படத்தில் எந்த உரிமமும் வாங்காமல் வைத்துள்ளனர். இது தெரியாத ரசிகர்கள் பலர் தெலுங்கு படத்தில் இருந்து காப்பி அடித்துதான் லியோ திரைப்படத்தில் அந்த காட்சியை வைத்துள்ளனர் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
