Latest News
ப்ரோமஷனுக்கு இத விட்டா வேற வழி இல்ல – குக்கு வித் கோமாளியை நாடிய பார்த்திபன்
முன்பெல்லாம் ஒரு படத்தை ப்ரோமோஷன் செய்ய வேண்டும் எனில் பத்திரிக்கைகள் மற்றும் டிவி சேனல்களில் அதை விளம்பரப்படுத்துவதை பார்த்திருப்போம். ஆனால் இப்போதெல்லாம் யூ ட்யூப் மற்றும் டிவி ப்ரோகிராம்கள் படத்தை ப்ரோமோட் செய்வதற்கு மிகவும் உதவுகின்றன.
ஏற்கனவே சுழல், வீட்ல விஷேசம், ஓ சினாமிகா போன்ற திரைப்படங்களை யூ ட்யூப் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் மூலமாக விளம்பரப்படுத்தினர்.
அந்த வழியை தற்சமயம் தமிழக நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அவர்களும் பின்பற்ற துவங்கியுள்ளார். தற்சமயம் பார்த்திபன் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம்தான் இரவின் நிழல்.
இந்த படம் ஒரு சிங்கிள் ஷாட் திரைப்படம் என கூறப்பட்டிருந்தது. இதனால் படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு விளம்பரத்திற்காக குக் வித் கோமாளி ஷோவில் கலந்துக்கொண்டுள்ளார் நடிகர் பார்த்திபன்.
இரவின் நிழல் படம் வருகிற ஜுலை 15 ஆம் தேதி வரவிருக்கும் நிலையில் இப்போது அதன் ப்ரோமோஷனை செய்வது சரியாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம். வருகிற 2 ஆம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வெளியாகும் குக்கு வித் கோமாளி ஷோவில் இது வெளியாக இருக்கிறது.