News
இந்த படம் எடுக்க ரொம்ப தைரியம் வேண்டும்! – செம்பி படம் குறித்து பேசிய பார்த்திபன்!
தமிழில் மைனா திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரபு சாலமன், அதன் பிறகு தொடரி, கயல்,கும்கி என பல படங்களை எடுத்தார்.
பொதுவாக பிரபு சாலமன் திரைப்படங்களில் புதுவித காட்சியமைப்பு இருக்கும். படம் மிகவும் எதார்த்தமாக இருக்கும். கதை மாந்தர்கள் பெரிதாக மேக்கப் செய்திருக்க மாட்டார்கள். பறந்து பறந்து அடிக்கும் சண்டை காட்சிகள் இருக்காது.

இயல்பு வாழ்க்கையை படமாக்க கூடிய முக்கியமான இயக்குனர் பிரபு சாலமன். இவர் தற்சமயம் இயக்கி வெளியாகி இருக்கும் படம் செம்பி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கோவை சரளா நடித்துள்ளார். இன்று செம்பி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுக்குறித்து வாழ்த்தி பதிவிட்டுள்ளார் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுக்குறித்து கூறும்போது, ” கனெக்ட் செய்யும் கதைக்களமும் ஒரு குற்றத்திற்கு உரிய தீர்ப்பையும் இப்படிக் கூட செயல்படுத்த முடியும் என பிரம்மிப்பில் ஆழ்த்திவிட்டார்.ஒளிப்பதிவும் இசைநுட்பமும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு சமமாக் வென்றிருக்கிறது. இவ்வளவு விரைவில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால் குற்றங்களே குறைந்துவிடும்” என கூறியுள்ளார்
மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது செம்பி.
