ஒரு இயக்குனரா எனக்கு அது மட்டும் போதும்.. மெய்யழகன் குறித்து இயக்குனர் பிரேம்.!

இயக்குனர் பிரேம் தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக மாறியுள்ளார். பெரும்பாலும் ஆக்‌ஷன் காட்சிகள், மாஸ் சினிமா என சினிமாக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி சென்று கொண்டுள்ளன. அதில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கும் இயக்குனர்கள் மிக அரிதான நபர்களே இருக்கின்றனர்.

இந்த நிலையில் அப்படியான ஒரு இயக்குனராகதான் இயக்குனர் பிரேம்குமார் இருந்து வருகிறார். அவர் இயக்கிய 96 திரைப்படமே தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் இயக்கிய திரைப்படம் மெய்யழகன்.

Social Media Bar

96 திரைப்படம் காதலை குறித்து பேசுவதாக இருந்தது. அதே சமயம் மெய்யழகன் திரைப்படம் உறவுகளுக்கிடையே இருக்கும் அன்பை பேசும் படமாக இருந்தது. இந்த நிலையில் மெய்யழகன் திரைப்படம் ஓ.டி.டியில் வெளியானப்போது அதில் பல காட்சிகள் குறைக்கப்பட்டிருந்தன.

ஜல்லிக்கட்டு தொடர்பான சில காட்சிகள் குறைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இதுக்குறித்து பிரேம் கூறும்போது ரசிகர்கள் இதற்காக என்னிடம் கோபித்து கொண்டனர். அந்த காட்சிகள் நன்றாக இருந்ததாக கூறினர்.

அதிலும் ஜல்லிக்கட்டுக்கு காளை வளர்க்கும் சிலர் அந்த காட்சி தங்களுக்கு மிக நெருக்கமாக இருந்ததாக கூறினர். படம் வெற்றியடைகிறது என்பதெல்லாம் தாண்டி அந்த படம் மூலம் ரசிகர்கள் எனக்கு கொடுத்த இந்த பெருமையே ஒரு இயக்குனருக்கு போது என கூறியுள்ளார் பிரேம்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.