எப்பொழுதுமே மர்ம நாவல்கள் என்பது ஆங்கிலேய மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானதாகும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் மர்மம் மற்றும் துப்பறிப்பது தொடர்பாக நாவல்கள் வருவது கிடையாது. ஆனால் அமெரிக்கா போன்ற இடங்களில் தொடர்ந்து அதிக பிரபலமாக இந்த மாதிரி நாவல்கள் தான் இருந்திருக்கின்றன.
அப்படி வெகு காலங்களாக பிரபலமாக இருந்த ஒரு கதைதான் பிராங்கன்ஸ்டைன். இறந்த மனிதனின் உடல்களை தைத்து அதற்கு உயிர் கொடுக்கும் ஒரு விஞ்ஞானி.
அதனை தொடர்ந்து அந்த உயிர் பெற்ற பிராங்கன்ஸ்டைன் என்கிற மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதாக கதை இருக்கும். தமிழில் கூட இதன் அடிப்படையில் நாளைய மனிதன் என்கிற திரைப்படம் வந்துள்ளது.
இந்த கதையை பலமுறை ஹாலிவுட்டில் படமாக்கிய பிறகு கூட இப்பொழுது மீண்டும் அதை ஒரு வெப் சீரிஸாக எடுத்து இருக்கின்றனர். ஆனால் இது கொஞ்சம் த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் இந்த சீரியஸின் டீசரை வெளியிட்டுள்ளது ஆஸ்கார் விருது பெற்ற Guillermo del Toro இந்த சீரிஸை இயக்குகிறார்.