Box Office
இந்தியன் 2 வை மிஞ்சிய கேம் சேஞ்சர்.. முதல் நாள் வசூல் நிலவரம்.!
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். தொடர்ந்து ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது.
ஆனால் சமீபத்தில் வந்த இந்தியன் 2 திரைப்படம் இயக்குனர் ஷங்கரின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் படமாக அமைந்தது. அதுவரை இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்த ஒரு திரைப்படமும் இவ்வளவு மோசமான தோல்வியை கண்டது இல்லை.
இதனால் அடுத்து ஷங்கர் இயக்கும் திரைப்படம் கண்டிப்பாக வெற்றி திரைப்படமாக இருக்க வேண்டும் என்கிற இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படம் உருவானது.
வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் அரசியல் கதை களங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ராம்சரண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும் எஸ்.ஜே சூர்யா அரசியல் வாதியாகவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் நேற்று ஒரு நாளில் கேம் சேஞ்சர் திரைப்படம் கிட்டத்தட்ட 47 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூலை விட இது அதிகம் என கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு ராம்சரண் நடித்த வினய வித்ய ராமா திரைப்படத்தை விடவுமே இது அதிக வசூலை கொடுத்துள்ளது என கூறப்படுகிறது.