Tamil Cinema News
ஹாலிவுட் படத்தோட அப்பட்டமான காப்பி கோட்..வெங்கட் பிரபு ஒத்துக்கலைனாலும் அதுதான் நெசம்.. எத்தனை ஒற்றுமை இருக்கு பாருங்க..!
தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் கோட்.
கோட் திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் விஜய் வில்லனாக நடித்த திரைப்படம் கோட். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது ஆனால் இந்த படம் துவங்கிய காலகட்டம் முதலே இது ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்கிற பேச்சு இருந்து கொண்டே இருந்தது.
ஹாலிவுட்டில் பிரபல நடிகர் வில்ஸ்மித் நடித்து வெளியான ஜெமினி மேன் என்கிற திரைப்படத்தின் காப்பி தான் கோட் என்கிற பெயர் இருந்து வந்தது. இந்த படம் வெளியான பிறகு கிட்டத்தட்ட அந்த திரைப்படம் ஜெமினி மேன் திரைப்படத்தோடு தழுவலாக இருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து இருக்கின்றனர்.
இந்த படத்தின் காபிதான்:
அதாவது ஜெமினி மேன் திரைப்படத்தில் முதல் காட்சியில் ஓடும் ரயிலில் அமர்ந்திருக்கும் நபரை வில்ஸ்மித் ஒரு பாறையின்மேல் ஸ்னைப்பரை வைத்துக் கொண்டு அமர்ந்தபடியே சுட்டுக் கொல்வார்.
அப்படியான ஒரு காட்சி இந்த படத்தில் நடிகர் அஜ்மலுக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல ஜெமினி மேன் திரைப்படத்திலும் வீல்ஸ்மித் கதாபாத்திரத்தை கொல்வதற்கு இன்னொரு இளமையாக இருக்கும் வில்ஸ்மித் கதாபாத்திரம் வரும்.
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட அந்த வில் ஸ்மித் தான் வயதான வில் ஸ்மித் கதாபாத்திரத்திற்கு வில்லனாக வந்து நிற்பான். இதில் எப்படி மோகன் அந்த இளமை கால விஜய்யை வளர்க்கிறாரோ அதேபோலத்தான் அந்த திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரம் இளமையாக இருக்கும் வீல்ஸ் ஸ்மித்தை வளர்த்து எடுப்பார்.
இதில் இரண்டு திரைப்படங்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் என்னவென்றால் ஜெமினி மேன் திரைப்படத்தில் இளமையாக வரும் வீல்ஸ்மித் கதாபாத்திரம் கிளைமாக்ஸ்சில் திருந்தி விடுவதாக காட்சி இருக்கும். ஆனால் கோட் திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தை கதாநாயகன் கொன்றுவிடுவார். மற்றபடி அப்படியே அந்த படத்தின் காப்பி தான் இந்த திரைப்படம் என்கின்றனர் ரசிகர்கள்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்