இனிமே இவன எவனாவது தலன்னு சொன்னீங்க!.. ஒரே படத்தில் விஜய் அஜித் இருவரையும் கலாய்த்த கவுண்டமணி!.

கவுண்டமணி எப்போதும் எல்லோரையும் கவுண்டர் அடித்து கொண்டிருப்பதால்தான் அவருக்கு கவுண்டர் மணி என்கிற பெயரே வந்ததாக சினிமாவில் ஒரு பேச்சு உண்டு.

அதற்கு தகுந்தாற் போல பெரிய நடிகர் சின்ன நடிகர் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் அவரும் கலாய்த்துவிடுவதுண்டு. அதனால் நிறைய நடிகர்களிடம் வெறுப்பையும் சந்தித்துள்ளார் கவுண்டமணி. இப்படி 2000 களில் விஜய் அஜித் நடித்து ஹிட் அடித்த படங்களை தனது திரைப்படங்களில் வைத்து செய்திருக்கிறார் கவுண்டமணி.

gaundamani1
gaundamani1

2003 ஆம் ஆண்டு பிரபு நடித்து வெளியான திரைப்படம் யெஸ் மேடம். இந்த திரைப்படத்தில் கவுண்டமணி அஜித் நடித்த சிட்டிசன் மற்றும் விஜய் நடித்த பூவே உனக்காக, ஷாஜகான் ஆகிய திரைப்படங்களை கலாய்த்து தள்ளியிருப்பார்.

ஒரு காமெடியனாக இருந்துக்கொண்டு சம காலத்தில் வளர்ந்து வரும் பெரிய நடிகர்களை இவ்வளவு வெளிப்படையாக கேலி செய்யும் தைரியமெல்லாம் தமிழ் சினிமாவிலேயே கவுண்டமணிக்கு மட்டுமே உண்டு என்றுதான் கூற வேண்டும்.