Tag Archives: கவுண்டமணி

கவுண்டமணியை விட்டுவிட்டு கதாநாயகியை கவனிக்கும் நெட்டிசன்கள்… வரவேற்பு பெறாத ஒத்த ஓட்டு முத்தையா பாடல்.!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் கவுண்டமணி. அவரது காமெடிகள் எல்லாம் ஒரு காலத்தில் காமெடி சேனல்களில் ரிப்பீட் மோடில் ஓடி கொண்டிருக்கும். ஆனால் தலைமுறைகள் மாற மாற கவுண்டமணிக்கு இருந்த வாய்ப்புகள் குறைய துவங்கின.

அதற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கினார் கவுண்டமணி, ஆனால் கதாநாயகனாகவும் அவருக்கு எந்த படமும் பெரிதாக வரவேற்பை தரவில்லை. இருந்தாலும் கூட தொடர்ந்து கதாநாயகனாக இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவர் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ஒத்த ஓட்டு முத்தையா.

இந்த திரைப்படமும் இதற்கு முன்பு இவர் நடிப்பில் வெளியானது 49 – ஓ திரைப்படம் போலவே அரசியல் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த பாடலே பார்ப்பதற்கு எண்டர்டெயின்மெண்டாக இல்லை. மேலும் அது பெரிதாக வரவேற்பையும் பெறவில்லை. பாடல் வெளியாகி 17 மணி நேரம் ஆன பிறகும் கூட 5000 வீவ்களை மட்டுமே பெற்றுள்ளது.

இந்த நிலையில் அதில் கமெண்ட் செய்த ரசிகர்களும் பாடலில் ஆடும் பிந்து என்னும் நடிகையை பாராட்டிதான் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி!.. சிவகார்த்திகேயன் ஆசை நிறைவேறிடும் போல!..

சமீப காலமாக 1980 களில் பிரபலமாக இருந்த நடிகர்கள் எல்லாம் திடீரென சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது

ஏனெனில் ஒரு காலத்தில் விஜய் அஜித்தை விட பெரிய கதாநாயகனாக இருந்தவர்கள் திரும்பவும் தமிழ் சினிமாவில் களமிறங்குகின்றனர் எனும் பொழுது அது எதிர்பார்ப்பை துண்டுவதாக இருக்கிறது. ஆனால் ரீ எண்ட்ரி என்று என்பது எல்லா நடிகர்களுக்கும் நல்லவிதமாக அமைந்து விடுவதில்லை.

ரீ எண்ட்ரி ஆகும் பிரபலங்கள்:

அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளே காரணமாக இருக்கின்றன உதாரணத்திற்கு அரவிந்த்சாமி தனி ஒருவன் திரைப்படத்தின் மூலமாகவே ரீ எண்ட்ரிஆனார். அந்த திரைப்படத்தின் கதைகளம் சிறப்பாக இருந்ததால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

Goundar-2

ஒருவேளை அரவிந்த்சாமி மோசமான ஒரு கதையை தேர்ந்தெடுத்து இருந்தால் அவருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்காது. அந்த வகையில்தான் நடிகர் ராமராஜன் நடித்த திரைப்படம் வரவேற்பு பெறாமல் போனதால் அவர் ரீ என்ட்ரி ஆனபிறகு கூட அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.

கவுண்டமணி ரீ எண்ட்ரி:

இதற்கு நடுவே நடிகர் மோகன் தற்சமயம் கோட் திரைப்படத்தில் வில்லனாக களம் இறங்கியிருக்கிறார். அது அவருக்கு கை கொடுக்குமா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும் இந்த நிலையில் கவுண்டமணியும் ஒத்த ஓட்டு முத்தையா என்கிற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் அறிமுகமாக இருக்கிறார்.

பொதுவாகவே கவுண்டமணிக்கு அரசியல் சார்ந்த காமெடிகள் என்பது சிறப்பாக வரும். திரைப்படங்களில் காமெடியனாக நடித்த காலகட்டங்களிலேயே உலக அரசியல் வரை அனைத்தையும் பேசியவர் நடிகர் கவுண்டமணி.

பின் நாட்களில் அவர் நடித்த 49 ஓ என்னும் திரைப்படம் கூட அரசியல் சார்ந்த திரைப்படமாக தன் இருந்து வந்தது. இந்த திரைப்படம் கண்டிப்பாக அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற சிவகார்த்திகேயன் ஆசையும் கவுண்டமணி ரீ எண்ட்ரி மூலமாக சாத்தியப்படும் என கூறப்படுகிறது.

நடிக்கணும்னு கேட்டுட்டு வேற ஒன்னு செய்ய சொன்னாங்க… ஜெயராம் படத்தில் அவதிக்குள்ளான நடிகை..!

இப்போதை விட முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி என்பது மிக அதிகமாகவே இருந்தது. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது ஆனால் அதை எல்லாம் தாண்டி மக்கள் கவர்ச்சி இல்லாத திரைப்படங்களை பார்ப்பார்கள் என்று கூறி சில இயக்குனர்கள் அதை நிரூபித்தும் இருக்கின்றனர்.

ஆனால் அதே சமயம் கவர்ச்சிக்கு இருக்கும் வரவேற்பு கொஞ்சம் கூட குறையவில்லை என்றும் கூறலாம். அதனால்தான் சில்க் ஸ்மிதா மாதிரியான நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து கொண்டிருக்கிறன. சில்க் ஸ்மிதா பிரபலமாக இருந்த காலகட்டங்களில் அவரிடம் வாய்ப்பு வாங்குவதற்காக தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றதாக கூறுவார்கள்.

சினிமாவில் ட்ரெண்ட்:

அந்த அளவிற்கு கவர்ச்சிக்காக திரைப்படத்திற்கு வரும் ஒரு கூட்டமும் அப்பொழுது இருந்தது. இப்படி கவர்ச்சி காட்டி மக்கள் மத்தியில் பிரபலமாகி வந்த ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அனுஜா ரெட்டி. ஆரம்பத்தில் அதிக கவர்ச்சி காட்டி வந்த இவர் பிறகு காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கினார்.

கவுண்டமணி செந்தில் மாதிரியான நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார் அதற்கு பிறகு வடிவேலுக்கு ஜோடியாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கவுண்டமணிக்கும் வடிவேலுவிற்கும் இடையே வெகு நாட்களாகவே பிரச்சனை இருந்து வருவதாக சினிமாவில் ஒரு பேச்சு உண்டு.

காமெடி நடிகர்களில் போட்டி:

அதனால் வடிவேலு திரைப்படங்களில் ஏதாவது ஒரு நடிகை நடித்து விட்டால் அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காமல் செய்து விடுவார் கவுண்டமணி என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து பேசிய அனுஜா  கூறும் பொழுது கவுண்டமணி எனக்கு அந்த மாதிரியான விஷயங்கள் எதையும் செய்யவில்லை.

ஆனால் வேறு மாதிரியான பிரச்சனைகளை திரைப்படங்களில் நடந்துள்ளன. குஷ்பூ ஜெயராம் நடித்த ஒரு திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுது அந்த காட்சியில் எனக்கு பிடிக்காத மாதிரி நடிக்க சொன்னார்கள் ஆனால் எனக்கு அதில் சுத்தமாக விருப்பம் இல்லை என்பதால் நான் அதில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். படத்தில் இருந்தும் விலகி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

சம்பள விஷயத்துல என்னையவே ஏமாத்திட்ட நீ!.. கவுண்டமணியை ஏமாற்றிய கே.எஸ் ரவிக்குமார்!..

தமிழ் சினிமா நடிகர்களில் காமெடி நடிகராக பெரிதும் வரவேற்பை பெற்றவர் நடிகர் கவுண்டமணி. பெரும்பாலும் கவுண்டமணி நடிக்கும் திரைப்படங்களில் அவரது காமெடிகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்.

தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. கவுண்டமணி கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வந்த திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

பொதுவாக கே.எஸ் ரவிக்குமார் படங்களில் நடிக்கும்போது நாள் கணக்கில்தான் சம்பளம் வாங்குவார் கவுண்டமணி. ஒரு வேளை அந்த கதாபாத்திரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால் நாள் கணக்கில் இல்லாமல் ஒரு படத்துக்கு இவ்வளவு என வாங்கி கொள்வார்.

இந்த நிலையில் நாட்டாமை திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரம்தான் என கூறிய கே.எஸ் ரவிக்குமார் நாள் சம்பளத்தில் கவுண்டமணியை நடிக்க வைத்தார். நான்கே நாட்களில் படப்பிடிப்பை முடித்து அனுப்பினார்.

ஆனால் படம் வெளியாகும்போது பார்த்தால் படம் முழுக்கவே கவுண்டமணி இருப்பார். அதனை பார்த்து ஷாக்கான கவுண்டமணி என்னையே ஏமாத்திட்டிலே நீ இனிமே உன் படத்தில் நாள் சம்பளத்தில் நடிக்க மாட்டேன்பா என கூறியுள்ளார்.

இனிமே இவன எவனாவது தலன்னு சொன்னீங்க!.. ஒரே படத்தில் விஜய் அஜித் இருவரையும் கலாய்த்த கவுண்டமணி!.

கவுண்டமணி எப்போதும் எல்லோரையும் கவுண்டர் அடித்து கொண்டிருப்பதால்தான் அவருக்கு கவுண்டர் மணி என்கிற பெயரே வந்ததாக சினிமாவில் ஒரு பேச்சு உண்டு.

அதற்கு தகுந்தாற் போல பெரிய நடிகர் சின்ன நடிகர் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் அவரும் கலாய்த்துவிடுவதுண்டு. அதனால் நிறைய நடிகர்களிடம் வெறுப்பையும் சந்தித்துள்ளார் கவுண்டமணி. இப்படி 2000 களில் விஜய் அஜித் நடித்து ஹிட் அடித்த படங்களை தனது திரைப்படங்களில் வைத்து செய்திருக்கிறார் கவுண்டமணி.

gaundamani1

2003 ஆம் ஆண்டு பிரபு நடித்து வெளியான திரைப்படம் யெஸ் மேடம். இந்த திரைப்படத்தில் கவுண்டமணி அஜித் நடித்த சிட்டிசன் மற்றும் விஜய் நடித்த பூவே உனக்காக, ஷாஜகான் ஆகிய திரைப்படங்களை கலாய்த்து தள்ளியிருப்பார்.

ஒரு காமெடியனாக இருந்துக்கொண்டு சம காலத்தில் வளர்ந்து வரும் பெரிய நடிகர்களை இவ்வளவு வெளிப்படையாக கேலி செய்யும் தைரியமெல்லாம் தமிழ் சினிமாவிலேயே கவுண்டமணிக்கு மட்டுமே உண்டு என்றுதான் கூற வேண்டும்.

ஏண்டா நாய்க்கு வைக்குற சீனெல்லாம் ஹீரோவுக்கு வைக்கிறீங்க!.. சுந்தர் சி காட்சியால் கடுப்பான கவுண்டமணி!.

தமிழில் காமெடி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. படம் முழுக்க காமெடி காட்சிகளை மட்டுமே வைத்து சுவாரஸ்யமான ஒரு திரைப்படத்தை அவரால் கொடுக்க முடியும்.

அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் உள்ளத்தை அள்ளித்தா. உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக அமைந்திருந்தது. இதனாலேயே அந்த திரைப்படத்தில் எமோஷனலான காட்சிகளே பெரிதாக இல்லையே என்கிற கேள்விதான் முதலில் சுந்தர் சிக்கு எழுந்தது.

sundar-c

இந்த நிலையில் அந்த படம் வெற்றி பெறுமா என்பதே சுந்தர் சி க்கு சந்தேகமாக இருந்தன. இந்த நிலையில் வெளியான ஒரு வாரத்திற்கு அந்த படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் பெரும் வெற்றியை கொடுத்தது உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம்.

விமர்சித்த கவுண்டமணி:

இதனை தொடர்ந்து செண்டி மெண்டாக ஒரு படம் இயக்க வேண்டும் என்று சுந்தர் சி இயக்கிய திரைப்படம் கண்ணன் வருவான். அந்த படத்தில் ஒரு காட்சியில் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் கார்த்திக்கு வெளிநாட்டு உணவுகளை வைத்து விருந்து வைத்திருப்பார்கள்.

ஆனால் கார்த்தி அதை உண்ணாமல் அவரது பாட்டி செய்த பால் சோறை உண்பார். இந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு அதை பார்த்து கடுப்பான கவுண்டமணி யோவ் உங்களுக்குதான் செண்டிமெண்ட் வராதுல. அப்புறம் எதுக்குய்யா ட்ரை பண்றீங்க.

எங்க ஊர்ல நாய்க்குதான்யா பால் சோறு வைப்பாங்க. ஏதோ காமெடி படமா இருக்கும்னு வந்தா இந்த படம் ஒரே கண்ணீரா இருக்கும் போலயே என கூறியுள்ளார் கவுண்டமணி.

போயும் போயும் வடிவேலு கூடவா நடிக்கிற!.. கோவை சரளாவிடம் சத்தம் போட்ட கவுண்டமணி!.. ஆனா அது பெரும் ஹிட்டு!..

Kovai sarala: கவுண்டமணி செந்தில் இருவரும் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டிருந்தப்போது கிராமத்தில் புதிதாக காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் வடிவேலு. வடிவேலுவை பொறுத்தவரை அவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நிறைய துன்பங்களுக்கு உள்ளானார்.

முக்கியமாக நடிகர் கவுண்டமணியால் தொடர்ந்து அவருக்கு தொல்லை இருந்து வந்தது. ஏனெனில் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்தாலும் கூட வடிவேலு அதில் தனியாக ஸ்கோர் செய்து வந்தார். இந்த நிலையில்தான் வரவு எட்டனா செலவு பத்தனா என்கிற திரைப்படத்தை இயக்குனர் வி.சேகர் இயக்கினார்.

வடிவேலுவை திரைத்துறையில் வளர்ச்சி அடைய உதவி செய்த இயக்குனர்களில் வி சேகர் முக்கியமானவர். இந்த நிலையில் வரவு எட்டனா செலவு பத்தனா திரைப்படத்தில் ஆட்டோ ட்ரைவர் பீட்டர் என்கிற கதாபாத்திரம் வடிவேலுவிற்கு கொடுக்கப்பட்டது.

கவுண்டமணி செய்த வேலை:

அதே திரைப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் நடித்தனர். இந்த நிலையில் நடிகை கோவை சரளாவிற்கு ஜோடியாக வடிவேலுவை நடிக்க வைத்தார் இயக்குனர். இந்த நிலையில் இந்த விஷயத்தை அறிந்த கவுண்டமணி கோவை சரளாவை அழைத்து நீ எவ்வளவு அனுபவம் வாய்ந்த நடிகை.

இப்படி வடிவேலு மாதிரியான புது காமெடி நடிகருக்கு உன்னை ஜோடியாக போட்டிருக்கிறார்கள். போயும் போயும் அவனுடனா நடிக்க போகிறாய் என கூறியுள்ளார். ஏனெனில் அதற்கு முன்பு வரை கோவை சரளா கவுண்டமணி மற்றும் செந்திலுக்குதான் ஜோடியாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் வி சேகரிடம் சென்று இதற்காக சண்டையிட்டுள்ளார் கோவை சரளா. ஆனால் வடிவேலு நன்றாக நடிக்கிறார். உங்கள் இருவரது காம்போ நல்ல வெற்றியை கொடுக்கும் என இயக்குனர் சமாதானப்படுத்தியதை அடுத்து அதில் நடித்தார் கோவை சரளா.

அதே போலவே அந்த திரைப்படம் வெளியானப்போது வடிவேலுவின் காமெடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

20 ஆண்டுக்கால சட்ட போராட்டம்!,, இறுதியில் ஜெயித்த கவுண்டமணி!.. வெளிவந்த தீர்ப்பு!.

Gaundamani : வெகு காலங்களாகவே நடிகர் கவுண்டமணி சொத்து தொடர்பான ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொண்டுள்ளார். இந்த நிலையில் அந்த பிரச்சனையில் அவருக்கு இறுதியாக தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

1996 இல் கோடம்பாக்கம் அருகில் உள்ள ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடமிருந்து பெரும் அளவில் நிலத்தை வாங்கியிருந்தார் கவுண்டமணி. அந்த இடத்தில் வணிக வளாகத்தை கட்டி அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பது கவுண்டமணியின் ஆசையாக இருந்தது.

எனவே ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்னும் கட்டுமான நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை போட்டு அங்கு வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டித் தருமாறு கேட்டு இருந்தார் கவுண்டமணி.

மொத்தமாக 22,700 சதுர அடி பரப்பிலான அளவில் வணிக வளாகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதை கட்டுவதற்கு மொத்தமாக மூன்று கோடியே 58 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயை கவுண்டமணி செலுத்தி இருந்தார்.

நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பு:

இந்த நிலையில் இந்த கட்டுமான நிறுவனம் நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் கூட கட்டுமான வேலையை துவங்காமலேயே இருந்தன. இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு கவுண்டமணி இது குறித்து சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் .

இந்த வழக்கில் 46 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே கட்டுமான பணிகள் நடத்தப்பட்டு இருக்கின்றன என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கவுண்டமணியின் இடத்தை அவரிடமே திரும்ப அந்த நிறுவனம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மேலும் 2008 ஆகஸ்ட் முதல் சொத்தை திரும்ப தராத ஒவ்வொரு மாதமும் ஒரு லட்ச ரூபாயை இழப்பீடாக அந்த நிறுவனம் கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

2021 இல் விண்ணப்பிக்கப்பட்ட இந்த மேல்முறையீட்டுக்கு தற்சமயம் தீர்ப்பு வந்துள்ளது அதில் கூறிய நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்திருக்கின்றனர். எனவே கவுண்டமணியிடம் பெறப்பட்ட நிலத்தை திரும்பத் தரவேண்டும் அதே சமயம் இதுவரை உள்ள நஷ்ட ஈடு தொகையையும் சேர்த்து தர வேண்டிய நிர்பந்தத்தில் அந்த கட்டுமான நிறுவனம் உள்ளது.

இவ்வளவு பெரிய பணக்காரர்கள் நடிகர்களுக்கே இவ்வளவு தாமதமாகதான் தீர்ப்பு கிடைக்கும் என்றால் நம் நிலை என்ன என்பதே மக்களின் குறையாக உள்ளது.

படப்பிடிப்பில் கவுண்டமணி எனக்கு மயக்கமருந்து கொடுத்துட்டாரு!.. அஜித் படத்தில் ஷகிலாவிற்கு நடந்த சம்பவம்!.

Gaundamani: தமிழ் சினிமா கலர் சினிமாவாக மாறிய பொழுது அதில் காமெடி நடிகர்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. அப்பொழுது போன தலைமுறை காமெடி நடிகர்களுக்கான வரவேற்புகளும் குறைந்து இருந்தன. அதை அப்போது பூர்த்தி செய்தவர்கள் கவுண்டமணியும் செந்திலும் தான்.

நடிகர் கவுண்டமணி 16 வயதினிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 16 வயதினிலே திரைப்படத்தை பொருத்தவரை அதில் அவருக்கு பெரிதாக நகைச்சுவை காட்சிகள் இருக்காது.

ஏனெனில் நகைச்சுவை காட்சிகளில் ரஜினிகாந்த் நிறைய இடங்களில் சூப்பராக செய்திருப்பார். இந்த நிலையில் கவுண்டமணி செந்தில் காம்போ என்கிற ஒரு காம்போ உருவாகி மக்கள் மத்தியில் பிரபலமானது. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில்தான், அதில் வரும் பெட்டர் மார்க்ஸ் லைட் காமெடி இப்போது வரைக்கும் பிரபலம் என்று கூறலாம்.

ஆனால் கவுண்டமணி கொஞ்சம் குசும்பு பிடித்தவர் என்று சினிமா வட்டாரத்திலேயே பலரும் கூறுவது உண்டு. பல நடிகர்களிடம் கேலியான விஷயங்களை பேசி அது பெரும் வம்பில் சென்று முடிந்த சம்பவங்களும் தமிழ் சினிமாவில் நடந்திருக்கின்றன.

கவுண்டமணி செய்த காரியம்:

இப்படியாக கவுண்டமணி நடிகை சகிலாவிடம் செய்த ஒரு விஷயம் குறித்து அவர் தனது பேட்டியில் கூறி இருக்கிறார். அப்பொழுதெல்லாம் கவர்ச்சி பாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. இதனால் அஜித் விஜய் மாதிரியான முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் கவர்ச்சி பாடல்கள் இருந்தன.

அப்படியான ஒரு கவர்ச்சி பாடலுக்காக ஷகிலா ஒரு திரைப்படத்தில் ஆடுவதற்கு வந்திருந்தார். அப்பொழுது அஜித் ஷகிலாவை சுற்றிவிட்டு ஆடுவது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்தது. இந்த நிலையில் ஆடும் நடிகைகளில் முக்கிய நடிகைகளுக்கு கவுண்டமணி பேரிச்சை பழம் கொண்டு வந்து கொடுத்தார்.

சரி ஆசையாக கொடுக்கிறார் என்று அவர்களும் தின்றுவிட்டனர். அதன் பிறகு அந்த சுற்றி ஆடும் நடனத்தின்போது இவர்களுக்கு தலையைச் சுற்ற துவங்கியுள்ளது. இதனால் அவர்கள் ஒழுங்காக ஆடவில்லை. என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது கவுண்டமணி கொடுத்த பேச்சை பழம் மதுவில் ஊறவைத்த பேச்சை பழம் எனப் பிறகுதான் தெரிந்தது என்கிறா ஷகிலா.

நைட் 1 மணிக்கு கோவில் வாசல்ல உக்காந்து கவுண்டமணி என்கிட்ட அழுதார்… இன்னும் மறக்க முடியல… பாக்கியராஜ்க்கு நடந்த நிகழ்வு!..

Gaundamani and Baghyaraj : தமிழில் குடும்ப சினிமா ஆடியன்ஸ்க்கு மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். இப்போது இருக்கும் எந்த இயக்குனருக்கும் இருக்கும் வரவேற்பை விட அதிகமான வரவேற்பு பாக்கியராஜுக்கு இருந்தது என்று கூறலாம்.

அப்போதெல்லாம் வார இறுதி நாட்களில் பாக்கியராஜை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்திற்கு முன்பு கிலோமீட்டர் கணக்கில் மக்கள் கூட்டமாக நிற்பார்கள் என்று கூறப்படுவதுண்டு. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றவராக பாக்கியராஜ் இருந்திருக்கிறார்.

bhagyaraj

ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பாக்கியராஜ் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த சாதாரண மனிதராகத்தான் இருந்திருக்கிறார். சின்ன வயதிலேயே நாடகங்களை பார்ப்பதில் ஆர்வமுடன் இருந்த பாக்கியராஜ் அதேபோல திரைப்படத்தையும் எளிதாக இயக்கி விட முடியும் என்று சென்னைக்கு வந்தார்.

சென்னைக்கு வரும்பொழுது கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையுடன்தான் அவர் வந்தார். ஆனால்  அவ்வளவு எளிதாக எல்லாம் கதாநாயகனாக ஆகிவிட முடியாது என்பது பிறகுதான் பாக்யராஜுக்கு தெரிந்தது.

எனவேதான் பிறகு இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் பாக்யராஜ். பாக்கியராஜ் உதவி இயக்குனராக இருந்த சமகாலத்தில் கவுண்டமணியும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார்.

கவுண்டமணிக்கு செய்த உதவி:

அப்பொழுது கவுண்டமணியும் பாக்கியராஜும் ஒரே அறையில்தான் தங்கி இருந்தனர். அப்போது பாக்யராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் 16 வயதினிலே திரைப்படத்தில் தனக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்று தொடர்ந்து பாக்யராஜிடம் கேட்டுக் கொண்டிருந்தார் கவுண்டமணி.

gaundamani-senthil

இதனால் அவரும் இயக்குனர் பாரதிராஜாவிடம் பேசி ஒரு வழியாக கவுண்டமணிக்கு வாய்ப்பை வாங்கி கொடுத்தார். வாய்ப்பு கிடைத்த அன்று பாக்யராஜ் நடு இரவில் கவுண்டமணியை ஒரு கோயிலுக்கு அழைத்து வந்து அங்கு கற்பூரம்  ஏற்ற சொல்லிவிட்டு இந்த நல்ல செய்தியை கூறியிருக்கிறார்.

உடனே அங்கேயே அமர்ந்து கண்ணீர் விட்டு அழத் துவங்கிய கவுண்டமணி இந்த வாய்ப்புக்காக பல வருடங்களாக காத்திருந்தேன் என்று கூறி பாக்யராஜிடம் நன்றி கூறியிருக்கிறார். அந்த நாளை என்றுமே மறக்க முடியாது என்று பாக்கியராஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். 

அந்த விஷயத்தை கவுண்டமணியை பார்த்துதான் காபி அடித்தார் அஜித்!.. ஆனால் அஜித்துக்கு இது செட் ஆகாது!..

Gaundamani and Ajith : தமிழ் சினிமாவில் விஜய்க்கு பிறகு பெரும் நடிகராக அறியப்படுபவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் திருப்பூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அஜித் எதேர்ச்சையாகதான் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றார்.

ஆனால் தமிழ் சினிமா அவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுக்கும் என்பது அஜித்தே எதிர்பார்க்காத ஒன்று. ஏனெனில் முதல் படம் நடித்து முடித்துவிட்டு மீண்டும் கார்மெண்ட்ஸ் ஒன்றை துவங்க வேண்டும் என்பதுதான் அஜித்தின் ஆசையாக இருந்தது.

அதை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் தற்சமயம் விஜய்க்கு அடுத்து அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஒரு நடிகராக அஜித்குமார் இருக்கிறார். பொதுவாக அஜித் இசை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா பத்திரிகையாளர் பேட்டி என்று எதற்குமே வர மாட்டார் இது அனைவரும் அறிந்தது தான்.

ajith1

இருந்தாலும் கூட அவருக்கான ரசிகர்கள் குறையவே இல்லை. ஆனால் இதை இதற்கு முன்பே செய்தவர் நடிகர் கவுண்டமணி. கவுண்டமணி தமிழ் சினிமாவில் பிரபலமாக துவங்கிய பொழுது அவரை பேட்டி எடுக்க நிறைய பத்திரிகைகள் முயற்சி செய்தன. அப்பொழுதெல்லாம் பத்திரிகைகள் நடிகர்களை பேட்டி எடுத்து அதை அவர்களது இதழில் வெளியிடுவார்கள்.

ஆனால் கவுண்டமணி எப்போதுமே இந்த மாதிரியான பேட்டிகளுக்கு ஒப்பு கொண்டதே கிடையாது. பத்திரிகையாளர் சந்திப்பு விருது வழங்கும் விழா போன்றவற்றிற்கு கவுண்டமணியும் வர மாட்டார். அவரை பார்த்துதான் அந்த பார்முலாவை அஜித் பின்பற்றுகிறாரா என்றும் பேச்சுக்கள் உண்டு இருந்தாலும் கவுண்டமணியாக இருந்தாலும் சரி அஜித்தாக இருந்தாலும் சரி அவர்கள் பொதுவெளிக்கு வராத காரணத்தினால் அவர்களுக்கான ரசிகர்கள் குறைந்தார்களா என்றால் அது மட்டும் இல்லை ரசிகர்கள் அதிகரித்து கொண்டு தான் இருந்தார்கள்.

ஜெய்ராம் அந்த ஒரு வார்த்தையை தப்பா சொன்னதுக்காக வச்சி செஞ்ச கவுண்டமணி… இப்பயும் அந்த காமெடியை பார்த்தா தெரியும்!..

Gaundamani jairam: திரையில் மட்டும் காமெடி செய்யாமல் நிஜ வாழ்க்கையிலும் நிறைய கவுண்டர் அடிப்பதால்தான் கவுண்டமணி என்கிற பெயர் அவருக்கு வந்தது. அவருக்கு தெரிந்த நெருங்கிய நண்பர்கள் மணி அண்ணன் என்று தான் அவரை அழைப்பார்கள்.

கமல்ஹாசன் ரஜினிகாந்த்தில் துவங்கி அவருக்கு யாரையெல்லாம் கேலியாக தோன்றுகிறதோ அவர்களை எல்லாம் கேலியாக பேசக்கூடியவர் கவுண்டமணி. அதுவே அவரது வாழ்க்கையில் சில பிரச்சனைகளையும் கொடுத்துள்ளது.

பல படங்களின் வாய்ப்புகள் அவருக்கு போவதற்கு காரணமாகவும் இருந்துள்ளது. இப்போதும் லால் சலாம் திரைப்படத்தில் செந்திலுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது கவுண்டமணிக்கு மட்டும் ஏன் எந்த திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என பார்க்கும் பொழுது அதற்கு இந்த பிரச்சனைகளே காரணமாக இருக்கும் எனலாம்.

இப்படி நடிகர் ஜெயராமிடமும் ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார் கவுண்டமணி. முறைமாமன் என்கிற திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கினார். அந்த திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கவுண்டமணி இருவரும் சேர்ந்து நடித்தனர்.

ஜெயராமிற்கு பெரிதாக தமிழ் தெரியாது என்பதால் படத்தின் வசனம் எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ அதை அப்படியேதான் பேசுவார். அதில் ஒரு காட்சியில் கவுண்டமணியும் ஜெயராமும்  பேய் வேடத்தில் வரும் பொழுது கவுண்டமணியை நாய் துரத்துவது போன்ற காட்சி ஒன்று இருக்கும்.

அந்த காட்சியில் அண்ணா என்று கூப்பிட வேண்டிய இடத்தில் அந்த வசனத்தை அப்படியே படித்த ஜெயராம் அண்ணன் என்று கூறினார். அதை பார்த்து சிரித்த கவுண்டமணி பிறகு டப்பிங் பேசும் பொழுது அந்த நாய் துரத்தும் பொழுது நாயிடம் அண்ணன் அண்ணன் என்று திரும்பத் திரும்பக் கூறி ஜெயராமின் உச்சரிப்பை கேள்வி கேலி செய்திருந்தார் இந்த விஷயத்தை சுந்தர் சி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.