News
பிக் பாஸ் விட்டு விலகினார் ஜிபி முத்து – போய்ட்டு வா தல.
பிரபலமாக இருக்கும் பலரும் எப்படியாவது போய்விட வேண்டும் என ஆசைப்படும் ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ். டிக் டாக் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான ஜிபி முத்துவிற்கு இந்த முறை அந்த வாய்ப்பு கிடைத்தது.

இருக்கும் ஆட்களிலேயே கிராமத்தை சேர்ந்த ஒரு சாமானியர் என்பதாலேயே ஜிபி முத்துவிற்கு அதிகப்படியான ரசிக மக்கள் இருந்து வந்தனர்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக ஜிபி முத்துவிற்கு மனநிலை சரியில்லாமல் இருந்தது. தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நினைவிலேயே இருந்தார். பிக்பாஸ் எவ்வளவு கூறியும் ஜிபி முத்து கேட்கவில்லை.
இந்நிலையில் இன்று இறுதியாக அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் உறுதியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியதால், போட்டியாளர்களிடம் கூறிக்கொண்டு விடை பெறுமாறு பிக் பாஸ் கூறிவிட்டார்.
