Connect with us

வாழ்க்கையே முடிஞ்சுடுச்சுன்னு இருந்தேன்.. ஜி.விதான் கை கொடுத்தார்.. மார்க் ஆண்டனி இயக்குனர் சந்தித்த பிரச்சனை!..

aadhik ravichandran gv prakash

Latest News

வாழ்க்கையே முடிஞ்சுடுச்சுன்னு இருந்தேன்.. ஜி.விதான் கை கொடுத்தார்.. மார்க் ஆண்டனி இயக்குனர் சந்தித்த பிரச்சனை!..

வாழ்க்கையே முடிஞ்சுடுச்சுன்னு இருந்தேன்.. ஜி.விதான் கை கொடுத்தார்.. மார்க் ஆண்டனி இயக்குனர் சந்தித்த பிரச்சனை!..

Social Media Bar

தமிழில் தொடர்ந்து ஆவரேஜ் திரைப்படங்களாக கொடுத்திருந்த போதிலும் கூட தனது ஒரே திரைப்படம் மூலமாக அது அனைத்தையும் மறக்க செய்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

தற்சமயம் அவர் இயக்கி வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வேறு சில படங்கள் வெளியாகியபோதும் பல திரையரங்குகளில் இன்னமும் மார்க் ஆண்டனி திரைப்படம் ஓடிக் கொண்டுள்ளது.

இதற்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரிஷா இல்லனா நயன்தாரா , ட்ரிபிள் ஏ போன்ற திரைப்படங்கள் எல்லாமே அதிக சர்ச்சைக்குரிய திரைப்படங்களாக இருந்தன. இதனால் மக்களும் அவர் மத்தியில் பெரிதாக நம்பிக்கை இல்லாமல் இருந்தனர்.

இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பேட்டியில் கூறும் போது ட்ரிபிள் ஏ திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு வாழ்க்கை முடிந்து விட்டது என்று நான் இருந்தேன். இதற்கு மேல் படமெல்லாம் எடுக்க வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் அப்போது என்னுடன் நல்ல நண்பராக இருந்த ஜி வி பிரகாஷ் எனக்கு பல வாய்ப்பு கொடுத்தார்.

என்னை வைத்து ஒரு படம் எடுங்கள் என்று கூறினார் அவரையும் சோனியா அகர்வாலையும் வைத்து ஒரு திரைப்படத்தை துவங்கினேன். ஆனால் அந்த திரைப்படத்தை முழுதாக எடுக்க முடியவில்லை என்றாலும் சினிமாவில் திரும்ப நம்பிக்கையுடன் நான் காலூன்றுவதற்கு ஜிவி பிரகாஷ் முக்கிய காரணமாக இருந்தார் என்று தனது பேட்டியில் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top