News
மொழி பிரச்சனையை தூண்டுகிறார் சித்தார்த்! – வழக்கு போட்ட இந்து மக்கள் கட்சி?
திரை நட்சத்திரங்களில் பிரபலமானவர் நடிகர் சித்தார்த். சில சமயங்களில் இவரது பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு. ஆனால் தற்சமயம் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு நடந்த அநீதி குறித்து கேள்வி எழுப்பியதற்காக நடிகர் சித்தார்த் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

சில நாட்கள் முன்பு விமான பயணத்திற்காக சித்தார்த்தின் பெற்றோர்கள் மதுரை விமான நிலையத்திற்கு சென்றதாக கூறபடுகிறது. அப்போது அங்கிருந்த நிலைய அதிகாரியில் ஒருவர் ஹிந்தியில் பேசினால்தான் விடுவேன் என சொல்லி சித்தார்த்தின் பெற்றோரை வெகுநேரம் காக்க வைத்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் சித்தார்த்.
இதை கேள்விப்பட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் அவர்கள் சித்தார்த்திற்கு ஆதரவாக பேசினார். இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை விமான நிலையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.
இந்நிலையில் சித்தார்த் மொழி பிரச்சனையை தூண்டுகிறார் என கூறி இந்து மக்கள் கட்சியானது அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது.
