Tamil Cinema News
என்னப்பா பொசுக்குன்னு இப்படி கேட்டுப்புட்டீங்க.. பத்திரிக்கையாளர் கேள்வியால் ஆடிப்போன சித்தார்த்..!
தமிழில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய நடிகராக நடிகர் சித்தார்த் இருந்து வருகிறார். நடிகர் சித்தார்த்திற்கு தேர்ந்தெடுக்கும் கதை களங்களில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகின்றன.
அவருக்கு ஒரு திரைப்படம் வெற்றி பெறுகிறது என்றால் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை கொடுக்கின்றன. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அவர் சமீபத்தில் நடித்த திரைப்படம் இந்தியன் 2.
இந்தியன் 2 திரைப்படம் அதிக எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது மேலும் அதில் சித்தார்த்தின் கதாபாத்திரம் பலருக்கும் பிடிக்காத கதாபாத்திரமாகவே இருந்து வந்தது.
சித்தார்த் சொன்ன பதில்:
இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் சித்தார்த் பேசிக் கொண்டிருந்த பொழுது சில காலங்களாக நீங்கள் தமிழ் சினிமாவில் காணாமல் போய்விட்டீர்களே? சித்தா திரைப்படத்திற்கு பிறகு உங்களை சினிமாவில் காணவில்லையே என்று கேட்டிருந்தனர்.
அதற்கு பதில் அளித்த சித்தார்த் என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க இப்பதான் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தேன். வருடத்திற்கு இரண்டு திரைப்படங்கள் நான் கொடுத்து வருகிறேன். அப்படி இருந்தும் தமிழ் சினிமாவில் என்னை காணவில்லை என்று கூறுகிறீர்கள். நான் எப்பொழுதும் தமிழ் சினிமாவில் தான் இருக்கிறேன். எனது வீடு சென்னையில் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் சித்தார்த்.