Tamil Cinema News
ரஜினியை பார்த்து அல்லு அர்ஜுன் கத்துக்கணும்.. இதைதான் அனுபவம்னு சொல்றது..!
ரசிகர்கள் எப்போதுமே நடிகர்களை பார்க்கும்பொழுது சாந்தமாக இருப்பது கிடையாது. வளர்ந்து வரும் நடிகர்கள் பலருக்குமே இது தெரியும் இதனால் தான் பெரிய நடிகர்கள் யாருமே பொது இடங்களில் ரசிகர்களுக்கு காட்சி கொடுக்க மாட்டார்கள்.
அப்படி கொடுப்பது எவ்வளவு இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனாலும் இந்த மாதிரியான விஷயங்களில் கவன குறைவாக இருந்த அல்லு அர்ஜுன் நேரடியாக ரசிகர்கள் மத்தியில் தோன்றிய காரணத்தினால் தற்சமயம் ஒரு உயிர் போய் உள்ள சம்பவம் தெலுங்கு சினிமாவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாள் முதல் ஷோவில் நேரில் ரசிகர்களை நேரில் சந்திக்கிறேன் என்று அல்லு அர்ஜுன் செய்த சம்பவத்தால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. இதனை அடுத்து ஆந்திர அரசு இனிமேல் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என்கிற ஒரு விஷயத்தை அறிவுறுத்தி இருக்கிறது.
அல்லு அர்ஜுன் கத்துக்கணும்:
அதேபோல இனி நடிகர்கள் திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை சந்திக்கக் கூடாது என்று ஒரு விஷயத்தை கூறினால் நன்றாக இருக்கும் என்பது பலரது கருத்தாக இருந்து வருகிறது. இது குறித்து சிலர் கூறும் பொழுது அல்லு அர்ஜுன் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்த்து ரசிப்பதற்காக வந்தார். அது தவறா? என்று கேட்கின்றனர்.
ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் கூறும் பொழுது அவ்வளவு பெரிய நடிகர் ரஜினிகாந்தே இதுவரை அவரது எந்த படத்திற்குமே நேரில் ரசிகர்கள் முன்பு தோன்றியது கிடையாது. ஏனெனில் அது எப்படியான பக்க விளைவு ஏற்படுத்தும் என்பது அவருக்கு தெரியும்.
முதல் நாளில் இரவு நைட் ஷோக்களுக்கு ரஜினிகாந்த் சென்றிருக்கிறார். ஆனால் அப்பொழுதும் அவர் மாறுவேடத்தில் தான் சென்று இருக்கிறார். மாறுவேடத்தில் சென்று திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தன் படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று கவனித்து விட்டு வருவார் அந்த ஒரு மனநிலை அல்லு அர்ஜுனுக்கு ஏன் இல்லாமல் போனது என்று கேள்வி எழுப்புகின்றனர் தமிழ் ரசிகர்கள்.