Tamil Cinema News
என்னை வேணும்னே கீழ தள்ளி விட பார்த்தாரு.. நட்சத்திர நடிகரால் ஆடிப்போன சித்தார்த்..!
நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமானவர் நிறைய திரைப்படங்களில் நிறைய வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் நடிகர் சித்தார்த்.
அதனாலேயே அவருக்கு என்று தனி வரவேற்பு தமிழ் சினிமாவில் உண்டு சமீபத்தில் கூட நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் சித்தா என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பெண்கள் பாதுகாப்பு குறித்து பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது.
மேலும் பள்ளி சிறுமிகள் குறித்து பல முக்கியமான விஷயங்களை இந்த படம் பேசியது. அதனால் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. தொடர்ந்து சித்தார்த் நிறைய திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிகர் சித்தார்த்:
ஆனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சித்தார்த். பாலிவுட்டில் அமீர்கானுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
அந்த படத்தின் அனுபவங்கள் சமீபத்தில் அவர் பேசியிருந்தார் அதில் அவர் கூறும் பொழுது ஒரு காட்சியில் நான் அமீர்கானை எட்டி உதைப்பது போன்ற காட்சி இருந்தது. அப்பொழுது நான் அமீர்கானிடம் கூறாமலேயே உதைத்து விட்டேன்.
பாலிவுட் அனுபவம்:
ஆனால் அவர் சமாளித்துக்கொண்டார். பிறகு படப்பிடிப்பு முடிந்த பிறகு உங்களிடம் சொல்லிவிட்டு நான் செய்திருக்க வேண்டும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நண்பர்கள் என்றால் அப்படித்தானே இருப்பார்கள் என்று கூறிவிட்டு சென்றார். ஆனால் இன்னொரு காட்சியில் நான் ஒரு கட்டிடத்தின் உச்சியில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பேன். அந்த காட்சியில் என்னிடம் சொல்லாமலே வந்து என்னை தள்ளி விடுவது போல் செய்தார். நான் பயந்தே போய் விட்டேன் அதில் நான் அவரை உதைத்த காட்சி படத்தில் வரவில்லை ஆனால் அவர் என்னை தள்ளுவதுபோன்று பாசாங்கு செய்த காட்சி படத்தில் வந்தது என்று கூறி இருக்கிறார் சித்தார்த்.