Tamil Cinema News
மனிதாபிமானமே இல்லாமல் பாடகியை அவமானப்படுத்தினார்.. இளையராஜா குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்.!
தொடர்ந்து இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய விஷயத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசி வருகிறார். ஒரு பக்கம் அந்த கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் இருந்து வந்தாலும் ஒரு பக்கம் ஆதரவுகளும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இளையராஜா முன்பு ஒரு முறை மேடையில் வைத்து பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலை அவமானப்படுத்திய விஷயம் குறித்த ஜேம்ஸ் வசந்தன் பேசியிருக்கிறார்.
பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் மிக பிரபலமானவர் ஆவார். ஹிந்தியில் நிறைய பாடல்களை பாடி இருக்கும் ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காலி ஆவார். மற்ற மொழிகள் தெரியாது என்றாலும் கூட பாடல் வரிகளை பார்த்து பாடும் பொழுது மிகச் சிறப்பாக அந்த பாடலை பாடி விடுவதால் அவருக்கு எல்லா மொழிகளிலுமே வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
தமிழில் கூட பாடல்கள் பாடியிருக்கிறார். இந்த நிலையில் இளையராஜாவுடன் மேடையில் பாடும் பொழுது இளையராஜா இசையமைத்த ஒரு பாடலை தமிழில் பாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது ஸ்ரேயா கோஷல் அதை தவறாக பாடிவிட்டார்.
அதற்கு இளையராஜா தமிழிலேயே ஒரு கமெண்ட் கொடுத்து ஸ்ரேயா கோஷலை அவமானப்படுத்தி இருந்தார். இது எவ்வளவு மோசமான ஒரு விஷயம் அவருக்கு தெரியாத மொழியில் அவரை அவமானப்படுத்துவது சரியா என்று இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
