என்கிட்ட வச்சிக்காதீங்க! – அப்போதே வடக்கன்ஸை அலறவிட்ட சிவாஜி கணேசன்!
தமிழ் சினிமாவில் மட்டுமன்றி இந்திய அளவிலேயே நடிகர் சிவாஜி கணேசனுக்கு தனியாக புகழ் உண்டு. அவருடைய சம காலத்தில் அவர் போல் நடிக்கும் இன்னொரு நடிகரை பார்க்க முடியவில்லை என பலரும் கூறுவதுண்டு.

இப்போது இருக்கும் நடிகர்கள் போல வெறும் சண்டை காட்சிகளில் மட்டும் நடித்துவிட்டு தன்னை கதாநாயகனாக காட்டி கொண்டவர் அல்ல சிவாஜி கணேசன். நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரமாக தேடி நடிப்பவர். சண்டை காட்சிகளே இல்லாத திரைப்படங்களில் கூட சிவாஜி கணேசன் நடிப்பார்.
1959 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த பாகப்பிரிவினை திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை முதலில் ஹிந்தியில்தான் படமாக்க இருந்தனர். அப்போது ஹிந்தியில் பிரபலமாக இருந்த நடிகர் திலீப் குமாரிடம் இந்த கதை சொல்லப்பட்டது.
ஒரு கை வேலை செய்யாதது போன்ற கதாபாத்திரமாகவெல்லாம் நடிப்பது கடினம் என அவர் அந்த படத்தை மறுத்துவிட்டார். பிறகு அதுவே சிவாஜி கணேசன் நடிக்கும்போது ஹிட் படமாக மாறியது. அதே போல வங்காளத்தில் பிரபல நடிகராக இருந்தவர் உத்தம் குமார்.
அவர் நடித்த ஒரு திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தில் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தார். அமரதீபம் என்கிற பெயரில் அந்த படம் வெளியானது. வங்காளத்தில் உத்தம் குமார் நடித்ததை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி.
இதனால் அப்போதே இந்தியாவில் பெரும் நடிகர்கள் எல்லாம் நடிகர் சிவாஜியை பார்த்து பயந்தார்கள் என அப்போது சிவாஜி படத்தில் பணிப்புரிந்த இயக்குனர் ஒருவர் கூறுகிறார்.