Cinema History
இந்த மாதிரி கதைக்கு க்ளாமர் கதாநாயகியை கேக்குறியே!.. தயாரிப்பாளர் கூறியும் கேட்காமல் இயக்குனர் வைத்த கதாநாயகி!..
தமிழ் சினிமாவில் 1990 கால கட்டங்களில் கதாநாயகிகள் இரண்டு வகையாக பிரித்து வைத்திருந்தனர். குடும்ப பாணியான திரைப்படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் கவர்ச்சி படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் என இரண்டாக பிரித்து வைத்திருந்தனர்.
இந்த கவர்ச்சியாக நடிக்கும் கதாநாயகிகளை பெரும்பாலும் குடும்ப பாணியிலான திரைப்படங்களில் நடிக்க வைக்க மாட்டார்கள். அதேபோல குடும்ப பாணியில் நடிக்கும் நடிகைகள் யாரும் கவர்ச்சியான திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள்.
உதாரணத்திற்கு சினேகா, தேவயானி, நதியா மாதிரியான நடிகைகள் தமிழ் சினிமாவில் எப்போதுமே புடவை கட்டி வரும் கதாநாயகியாகதான் நடித்திருப்பார்கள். ஒருவேளை மாடர்ன் உடை அணிவதாக இருந்தாலும் கூட அந்த உடையும் நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் தான் அவர்கள் அணிவார்கள்.
அதேபோல கவர்ச்சி கதாநாயகிகளாக சிம்ரன், குஷ்பு, ரோஜா மாதிரியான நடிகைகள் பார்க்கப்பட்டார்கள். அதனால் அதிகபட்சமாக அவர்களுக்கு கவர்ச்சியான கதைகளே திரைப்படமாக அமைந்தன. இருந்தாலும் இதற்கு விதிவிலக்காக சில இயக்குனர்கள் அனைத்து விதமான கதைகளையும் எந்த வகையான கதாநாயகியாக இருந்தாலும் அவர்களை வைத்து எடுத்தனர்.
இயக்குனர் எழில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் கதையை எழுதிய பொழுது அதற்கு தேவையானி மாதிரியான ஒரு நடிகையை தான் கதாநாயகியாக வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார் தயாரிப்பாளர்.
ஏனெனில் அந்த கதைப்படி அப்படிப்பட்ட ஒரு குடும்ப பாணியான பெண்ணுக்குதான் அந்த கதாபாத்திரம் சரியாக இருக்கும் என்று நினைத்தார் தயாரிப்பாளர். ஆனால் இயக்குனர் எழிலை பொருத்தவரை சிம்ரன் தான் அந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
இதை கேட்ட தயாரிப்பாளர் இந்த கதாபாத்திரத்திற்கு சிம்ரன் சரியாக வருவாரா அப்படியே அவர் சரியாக நடித்தாலும் இதுவரை அவரை கவர்ச்சியாக பார்த்த மக்கள் இப்படி புடவை கட்டி சிம்ரனை ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த எழில் நாம் காட்டும் விதத்தில்தான் இருக்கிறது கண்டிப்பாக சிம்ரன் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று கூறியிருக்கிறார். அதேபோலவே சிம்ரனிற்கு ஒரு சிறப்பான திரைப்படமாக துள்ளாத மனமும் துள்ளும் அமைந்தது. அதற்கு பிறகு குடும்ப பாணியிலான சில திரைப்படங்களும் அவருக்கு கிடைத்தன.