Connect with us

அந்த படத்துல நடிச்சா ஆபத்து!.. விஜயகாந்தை காப்பாற்றி விட்ட அவரது நண்பர்..

vijayakanth

Cinema History

அந்த படத்துல நடிச்சா ஆபத்து!.. விஜயகாந்தை காப்பாற்றி விட்ட அவரது நண்பர்..

Social Media Bar

சாதரண கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்து பெரும் உச்சத்தை தொட்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். கருப்பான தேகத்துடன் கிராமத்து மனிதர் போல இருந்ததால் அடித்தட்டு மக்கள் அவரை உடனே ஏற்றுக்கொண்டனர்.

சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பலருக்கும் பல நன்மைகளை செய்தவர் விஜயகாந்த். மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்பது போல அந்த நன்மைகளே விஜயகாந்தை வெகுவாக காப்பாற்றியுள்ளது.

ஆரம்பத்தில் வெகு நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார் விஜயகாந்த். அப்போது அவருடன் வாய்ப்பு தேடி வந்த சரத்குமார், சத்யராஜ் ஆகியோருக்கு வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகுதான் விஜயகாந்த் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

சில படங்கள் ஹீரோவாக நடித்த பிறகும் கூட வில்லனாக நடித்த நடிகர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் கூட விஜயகாந்திற்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு வந்தது.

ஆனால் அப்போது அவரது நண்பராக இருந்த ராவத்தர் வில்லனாக நடித்தால் உனக்கு வரவேற்பு குறைந்துவிடும். காலம் கடந்தாலும் பரவாயில்லை ஹீரோவாகவே நடி என அவர் உபதேசம் கொடுத்துள்ளார். அதே போல சில காலங்களில் ஹீரோவாக அதிக வரவேற்பை பெற்றார் விஜயகாந்த்..

To Top