Connect with us

விஜய் நடித்து பெரும் ஹிட் கொடுத்த படம்!.. ஆனால் முரளி நடிக்க வேண்டியது.. வாய்ப்பை கெடுத்த தயாரிப்பாளர்!.

vijay murali

Cinema History

விஜய் நடித்து பெரும் ஹிட் கொடுத்த படம்!.. ஆனால் முரளி நடிக்க வேண்டியது.. வாய்ப்பை கெடுத்த தயாரிப்பாளர்!.

Social Media Bar

இதுவரை தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். ஆனால் விஜய் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு இப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மக்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிவு செய்து ஒரு வரவேற்பை பெறுவதற்கு விஜய் அதிகமாக கஷ்டப்பட்டார். அவரை ஹீரோவாக்கியே தீர வேண்டும் என்று மிகவும் பிடிவாதமாக இருந்தார் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்

விஜய்யின் முதல் படத்திற்கு பிறகு கூட அவருக்கு வரவேற்பு இல்லாத காரணத்தினால் எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்துடன் விஜய்யை சேர்த்து நடிக்க வைத்து செந்தூரப்பாண்டி என்கிற திரைப்படத்தை வெளியிட்டார். அதற்கு பிறகு சில படங்கள் நடித்தாலும் விஜய்க்கு பெரிதாக வரவேற்பு இல்லாமலே இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் விக்ரமன் ஒரு குடும்பபாணியான கதையை எழுதி வைத்திருந்தார். அந்த படத்தில் நடிகர் முரளியை நடிக்க வைக்க இருந்தார். ஏனெனில் அப்போது முரளிக்கு குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் செல்வாக்கு இருந்தது.

ஆனால் இந்த கதையை கேள்விப்பட்ட எஸ்.ஏ சந்திரசேகர் அது தனது மகனுக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தார். எனவே தயாரிப்பாளரிடம் பேசி அந்த படத்தில் விஜய்யை நடிக்க வைத்தார். அதுதான் விஜய் நடித்து வெளியான பூவே உனக்காக திரைப்படம்.

அந்த திரைப்படம் விஜய் பெரிய அளவில் பிரபலமாகியது. அதற்குப் பிறகு நல்ல நல்ல கதைகளாக விஜய்க்கு வர துவங்கின. ஒருவேளை அந்த படத்தில் முரளி நடித்திருந்தால் அவருக்கும் வாழ்க்கையை மாற்றக்கூடிய திரைப்படமாக பூவே உனக்காக திரைப்படம் அமைந்திருக்கும்.

To Top