இப்ப படம் பண்ண முடியாது!.. ரஜினி அஜித்தால் விஜய் பையனுக்கு வந்த சங்கடம்!..

Jason sanjay: தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை இயக்கும் முக்கியமான இரண்டு பெரிய நிறுவனங்கள் என்றால் அதில் ஒன்று சன் பிக்சர்ஸ் மற்றொன்று லைகா நிறுவனம். லைகா நிறுவனத்தை பொறுத்தவரை வெளிநாட்டில் பெரும் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது.

தற்சமயம் மிகப்பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது லைகா நிறுவனம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்து வேட்டையன் மற்றும் விடாமுயற்சி ஆகிய இரு திரைப்படங்களை தயாரித்து வருகிறது லைகா. இந்த இரு திரைப்படங்களுமே பெரும் பட்ஜெட் திரைப்படங்கள் என்பதால் அவற்றிற்கான தினசரி படப்பிடிப்பு செலவுகளே லட்சங்களில் இருக்கின்றன.

Vettaiyan
Vettaiyan
Social Media Bar

இந்த நிலையில் அவ்வளவு செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறது லைகா நிறுவனம். எனவே தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பை மட்டுமாவது முழுதாக முடித்து விட வேண்டும் என்று லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தாமதமாகும் படப்பிடிப்பு:

ஏனெனில் வேட்டையன் திரைப்படத்தை இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்குகிறார். அவரது இயக்கத்தில் வெளியாவதால் கண்டிப்பாக இந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சையின் திரைப்படத்தையும் லைகா தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தது.

jason-sanjey
jason-sanjey

அதற்கான திரைக்கதை வேளையில் ஏற்கனவே ஜேசன் சஞ்சய் இறங்கிவிட்டார். இந்த திரைப்படத்தில் துரு விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் முடிந்த நிலையில் படப்பிடிப்பை துவங்குவதற்கு காத்திருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

இந்த நிலையில் இந்த ரஜினி அஜித் திரைப்படங்களின் பிரச்சினை காரணமாக இந்த வருடம் ஜேசன் சஞ்சய் திரைப்படத்தை துவங்குவது கடினம் என்று கூறப்படுகிறது. எனவே லைக்கா நிறுவனம் மிக தாமதமாகத்தான் அந்த திரைப்படத்தை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது எனவே இந்த திரைப்படத்தின் படபிடிப்பு அடுத்த வருடம் தான் துவங்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன.