Cinema History
யாரிடமும் பகிராத ஒன்றை என்னிடம் பகிர்ந்த ஜெயலலிதா.. உண்மையை கூறிய வெண்ணிற ஆடை மூர்த்தி..!
அதிக நகைச்சுவை காட்சிகளில் நடித்து பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியனாக இருந்த காமெடி நடிகர்களின் மிக முக்கியமானவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.
வெண்ணிற ஆடை மூர்த்தி தமிழ் சினிமாவிற்கு வரும்பொழுது கதாநாயகனாக வேண்டும் என்கிற ஆசையில்தான் சினிமாவிற்கு வந்தார். ஆனால் காமெடி காட்சிகளில் அவர் நடிப்பதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து காமெடி நடிகராகவே இருந்து விட்டார்.
கதாநாயகனாக நடித்திருந்தால் கூட எவ்வளவு வருடங்கள் சினிமாவில் இருந்திருப்பார் என்று தெரியவில்லை. ஆனால் காமெடி நடிகராக வெகு வருடங்கள் சினிமாவில் அவரால் இருக்க முடிந்தது.
ஜெயலலிதாவிற்கும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. இவர்கள் இருவருக்குமே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் வெண்ணிற ஆடை தான் ஜெயலலிதா மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி இருவருக்குமே முதல் திரைப்படம்.
இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் ஜெயலலிதாவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதலமைச்சர் ஆன பிறகு ஜெயலலிதா சினிமா வட்டாரங்களில் இருந்த பல பிரபலங்களுடன் நட்பில் தான் இருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய நட்பு குறித்து வெண்ணிற ஆடை மூர்த்தி முன்பு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
அப்பொழுது நான் எனக்கு தோன்றும்போது ஒரு ஓரமாக நின்று உங்களை பார்த்துக்கொள்கிறேன். அதற்கு மட்டும் நீங்கள் எனக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறினேன். உடனே ஜெயலலிதா சிரித்து கொண்டே எனக்கு ஒரு போன் நம்பரை கொடுத்தார்.
இது என்னுடைய தனிப்பட்ட போன் நம்பர். இது யாருக்கும் பெரிதாக தெரியாது உங்களுக்கு என்னை பார்க்க தோன்றினால் இந்த எண்ணுக்கு போன் செய்து என்னிடம் பேசலாம் என்று கூறினார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி.
