Connect with us

மனைவியை பிரிந்த பிறகு ஜெயம் ரவி எடுத்த புது அவதாரம்.. லைன் அப் படங்களை கேட்டால் அதிர்ச்சி ஆயிடுவீங்க!..

jayam ravi

Tamil Cinema News

மனைவியை பிரிந்த பிறகு ஜெயம் ரவி எடுத்த புது அவதாரம்.. லைன் அப் படங்களை கேட்டால் அதிர்ச்சி ஆயிடுவீங்க!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சை இல்லாத நடிகராக இருந்து இப்போது அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு நடிகராக மாறியவர் நடிகர் ஜெயம் ரவி.

தொடர்ந்து தன்னுடைய மனைவி மற்றும் மாமியாரின் அடைகலத்தில் இருந்து வந்த ஜெயம் ரவி அவர்களை விட்டு பிரிந்த பிறகு நிறைய கஷ்டத்தை அனுபவித்தார் ஜெயம் ரவி.

முக்கியமாக அவருடைய வங்கி கணக்கு அவருடைய மனைவியின் பெயரோடு இணைக்கப்பட்டிருப்பதால் அவரால் பணம் கூட எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.

jayam-ravi

jayam-ravi

இவ்வளவையும் தாண்டி தற்சமயம் ஜெயம் ரவி தனது குடும்பத்தைப் பிரிந்து தனியாக வந்திருக்கிறார். இதுவரை அவர் நடித்த திரைப்படங்களை எல்லாம் அவரது மாமியார்தான் தேர்ந்தெடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் தான் ஜெயம் ரவியின் நிறைய திரைப்படங்கள் தோல்வியை கண்டு வந்தன.

ஜெயம் ரவியின் புது மாற்றம்:

இந்நிலையில் இப்பொழுது கதை மற்றும் இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார் ஜெயம் ரவி ஏனெனில் இதுவரை அவர் கொடுத்த தோல்வி படங்களின் காரணமாக அவரது மார்க்கெட் வெகுவாக குறைந்து இருக்கிறது.

எனவே தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இளம் இயக்குனர்களிடம் கதை கேட்க துவங்கியிருக்கிறார் ஜெயம் ரவி. அந்த வகையில் ஏற்கனவே வெற்றிமாறனின் ஒரு கதைக்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

மேலும் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே பாலாஜி, போன்ற நபர்களிடமும் கதை கேட்டு வருகிறாராம் ஜெயம் ரவி தொடர்ந்து அவர் 2026 வரை இந்த மாதிரி முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

Articles

parle g
madampatty rangaraj
To Top