Tamil Cinema News
இளையராஜாவுக்கு பணத்தாசை.. ரஹ்மான் மனசால பெரியவர்.. ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்.!
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு ஒரு சிவாஜி கணேசன் இருப்பது போல இசைக்கு ஒரு ஆள் என்றால் அது இளையராஜாதான். பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதில் போஸ்டர்களில் கதாநாயகனின் பெயர்தான் இருக்கும்.
ஆனால் இளையராஜா இசையமைக்கும் படங்களில் எல்லாம் அவரது புகைப்படம்தான் போஸ்டர்களில் பெரிதாக இருக்கும். அந்த அளவிற்கு இளையராஜாவின் இசைக்கு என ஒரு மார்க்கெட் இருந்தது. இளையராஜா பல நுட்பமான இசைகளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
ஆனால் ஏ.ஆர் ரகுமான் சினிமா துறைக்குள் வந்தப்போது பெரிய மாற்றம் ஏற்பட்டது. இளையராஜாவின் இசையில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட இசையாக ஏ.ஆர் ரகுமானின் இசை இருந்தது. அவரது இசை வளர்ச்சி எந்த அளவிற்கு இருந்தது என்றால் ஹிந்தி, ஹாலிவுட் என பல இடங்களில் ஏ.ஆர் ரகுமானின் இசை பிடித்து அவரை இசையமைக்க அழைத்தனர்.
அந்த பெருமை தமிழ் சினிமாவில் மற்ற இசையமைப்பாளர்களுக்கு அமையவில்லை. அப்போதிருந்தே ஏ.ஆர் ரகுமான் மற்றும் இளையராஜா ரசிகர்களுக்கு இடையே சண்டை உண்டு.
இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.ராஜன் இளையராஜா குறித்து பேசியிருந்தார். அவர் பேசும்போது இளையராஜா ஒரு இசைஞானி என்பதை நான் மறுக்கல. ஆனால் அவருக்கு பணத்தின் மீது அதிக பேராசை உண்டு.
அவர் பாடல்களிலேயே நிறைய மற்ற மொழி பாடல்களின் சாயல் உண்டு. அவரே காபி அடிச்சிதான் இசையமைச்சி இருக்கார். ஆனால் அதை இசையமைக்க சொந்த மகனுக்கே காபிரைட்ஸ் கொடுத்தாரு.
ஆனால் ஏ.ஆர் ரகுமான் அப்படி கிடையாது. அவர் அற்புதமான மனிதன். வயசு சின்னவர் என்றாலும் மனசால ரொம்ப பெரியவர் என கூறியுள்ளார் கே. ராஜன்.