Tamil Cinema News
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மனிதரா? 6 கோடி எடுத்து கொடுத்த நெல்சன்.. ஆடிப்போன திரைத்துறை.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் நெல்சன் இருந்து வருகிறார். அவர் இயக்கிய திரைப்படங்களில் டாக்டர் மற்றும் ஜெயிலர் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பெரும் வெற்றியை கொடுத்தது.
அதிலும் ஜெயிலர் திரைப்படம் எதிர்பாராத வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் நெல்சன் ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாகதான் தயாராகி வருகிறது.
இதற்கு நடுவே இயக்குனர் நெல்சன் தயாரித்த திரைப்படம்தான் ப்ளடி பெக்கர். இந்த திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானப்போதும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
சொல்ல போனால் போட்ட காசை கூட எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெரும் தோல்வியை சந்தித்தார் நெல்சன். இதற்கு நடுவே படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு இந்த படத்தால் 8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
பொதுவாக சினிமாவில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் முழு நஷ்ட தொகையையும் கொடுக்க முடியாவிட்டாலும் கூட தயாரிப்பாளர்கள் தங்களால் முடிந்த தொகையை குடுப்பதுண்டு. ஆனால் அதை அவ்வளவு எளிதில் தர மாட்டார்கள்.
அதற்கே சில வருடங்கள் ஆகும். ஆனால் நெல்சனை பொறுத்தவரை விநியோகஸ்தருக்கு உடனே 6 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக கொடுத்து சரி கட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு நபரா என இதுக்குறித்து பேச்சுக்கள் சென்று கொண்டுள்ளன.
