ட்ரைவரிடம் தாய் பால் கொடுத்த காஜல் அகர்வால்.. கேரவனில் அவசரமாக நடந்த சம்பவம்!..

பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். முதலில் தன்னுடைய சினிமா பயணத்தை ஹிந்தியில் ஆரம்பித்த இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஹேக் காயா நாகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத், குஷ்பூ நடிப்பில் வெளிவந்த பழனி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் அதன் பிறகு தமிழில் பல படங்கள் அவருக்கு குவிந்தன.

பிறகு 2001 ஆம் ஆண்டு மகதீரா என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். இந்த படம் வணிக ரீதியாக நல்ல வெற்றியை கொடுத்ததால் காஜல் அகர்வாலுக்கு மேலும் பட வாய்ப்புகள் குவிந்தது.

Kajal Agarwal
Social Media Bar

தமிழில் முன்னணி நடிகரான விஜயுடன் ஜில்லா, மெர்சல், துப்பாக்கி திரைப்படத்திலும் அஜித்துடன் விவேகம் திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

கார்த்தியுடன் நடித்த ஆல் இன் ஆல் அழகு ராஜா திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்நிலையில் இவர் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவருக்கு நீல் என்ற ஒரு மகனும் இருக்கிறான்.

ஓப்பனாக பேசிய நடிகை காஜல் அகர்வால்

குழந்தை பிறந்த பிறகும் நான் திரைப்படங்களில் நடிக்கிறேன். மேலும் நான் ஷூட்டிங் செல்லும் பொழுது என்னுடைய மகனையும் அழைத்து செல்வேன். என்னுடைய கேரவன் படப்பிடிப்பு தளத்திலிருந்து தூரமாக நின்று கொண்டிருக்கும்.

நான் என்னுடைய மகனுக்காக தாய்ப்பால் கறந்து என்னுடைய டிரைவரிடம் கொடுத்து அனுப்புவேன். இவ்வாறு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என்னுடைய டிரைவர் தாய்ப்பாலை கொண்டு போய் என்னுடைய மகனுக்கு கொடுத்துவிட்டு வருவார்.

இவ்வாறாகத்தான் நான் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஷூட்டிங் நடித்து வந்தேன். மேலும் தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு அவ்வளவு முக்கியம் என காஜல் கூறியிருக்கிறார்.