இன்னைக்கு வரைக்கும் கமல் செஞ்ச அந்த காரியத்தை நான் வெளில சொல்லல!.. மனம் திறந்த வெண்ணிற ஆடை மூர்த்தி!.

Kamalhaasan : தமிழில் உள்ள சீனியர் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. ஜெயலலிதா அறிமுகமான அதே திரைப்படமான வெண்ணிற ஆடை மூலமாகதான் வெண்ணிற ஆடை மூர்த்தியும் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

ஆரம்பத்தில் இயக்குனர் ஸ்ரீதர் இவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த பொழுதும் கூட தனக்கு கதாநாயகனாக நடிப்பதை விடவும் காமெடியனாக நடிப்பது தான் பிடித்திருக்கிறது என்றும் அது தான் தனக்கு மனதிருப்தியை கொடுக்கும் என்றும் கூறி வந்த வாய்ப்பை கைவிட்டு தமிழ் சினிமாவில் காமெடியனாக மாறியவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.

vennira-aadai-murthy
vennira-aadai-murthy
Social Media Bar

ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி சிறப்பாக நடிக்க கூடியவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. அவரது முக பாவனைகள் தமிழ் சினிமாவில் தனித்துவமானவை, அப்போதைய காலகட்டத்திலேயே காசேதான் கடவுளடா போன்ற திரைப்படங்களில் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்தன.

இந்த நிலையில் கமல்ஹாசன் திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த பொழுது இன்றோடு நான் சினிமாவிற்கு வந்து 25 வருடங்கள் ஆகிறது என்று கூறியிருக்கிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி. அதனைக் கேட்ட கமல்ஹாசன் அவரை தனியாக அழைத்துச் சென்று 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுங்கள்.

ஏனெனில் எங்கள் திரைப்படங்கள் எல்லாம் ஒரு நான்கு திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை கொடுத்து விட்டால் நாங்கள் சினிமாவை விட்டு போக வேண்டும் என்கிற நிலைமை இருக்கிறது என்று கேட்டிருக்கிறார் கமல். அதற்கு பதில் அளித்த வெண்ணிற ஆடை மூர்த்தி அவ்வளவு ரிஸ்க் இருப்பதால்தான் உங்களுக்கு சம்பளம் அதிகமாகவும் எங்களுக்கு சம்பளம் குறைவாகவும் தருகின்றனர் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் 25 வருடங்கள் முடிவடைந்ததை கௌரவப்படுத்தம் விதமாக அவருக்கு பத்தாயிரம் ரூபாயை எடுத்து கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன். இல்லைப்பா அதெல்லாம் வேண்டாம் என்று வெண்ணிற ஆடை முர்த்தி கூறிய பொழுதும் இதெல்லாம் வெளியியே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் எனக்கு உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது கொடுத்தேன் என்று கூறி அவரது பாக்கெட்டில் அந்த பத்தாயிரம் ரூபாயை திணித்திருக்கிறார் கமல்ஹாசன். இந்த விஷயத்தை வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.