ஒரே மாதிரி யோசிக்கும் கமல், டாம் க்ரூஸ் ! – என்ன பண்ணாங்க தெரியுமா?

பல வருடங்களுக்கு பிறகு உலகநாயகன் கமலஹாசன் நடித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் விக்ரம்.


1986 ஆம் ஆண்டு ஏற்கனவே விக்ரம் என்ற பெயரில் கமல் நடித்த திரைப்படம் நல்ல வெற்றியை கண்டது. எனவே இந்த படத்திற்கும் அதே பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களான பகத் ஃபாசில், சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளதால் மக்களிடையே விக்ரம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.


1986 ஆம் ஆண்டு விக்ரம் திரைப்படம் வெளியாகும்போதும் அது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. 1986 ஆம் ஆண்டு மே 29 அன்று ராஜ சேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில் விக்ரம் திரைப்படம் வெளியானது.


அதே 1986 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி ஹாலிவுட் திரைப்படமான டாப் கன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரமான டாம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை டோனி ஸ்காட் என்னும் இயக்குனர் இயக்கி இருந்தார்.


தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய விக்ரம் திரைப்படமானது ஜூன் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் டாம் க்ரூஸ் ஹாலிவுட்டில் நடித்து டாப் கன் திரைப்படத்தின் இன்னொரு பாகமான டாப் கன் மேவரிக் என்கிற திரைப்படம் வரும் ஜூன் 27 அன்று வெளியாக இருக்கிறது.


இந்த இரு சம்பவங்களும் எதேர்ச்சையாக நடந்தாலும் கூட வியப்புக்குரிய வகையில் கோலிவுட் ஹீரோவும், ஹாலிவுட் ஹீரோவும் போட்டி போட்டுக்கொள்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகநாயகனுக்கு உலக அளவில் போட்டி உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Refresh