Latest News
6 வருஷம் எந்த பிரச்சனையும் இல்லாம இருந்துச்சு.. பாயாசத்துக்கு ஆசைப்பட்டது தப்பா.. ஷங்கர் செய்த வேலையை மேடையில் உடைத்த கமல்ஹாசன்!..
இந்தியன் திரைப்படம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வெகுமான வரவேற்புகள் இருந்து வருகிறது.
அதற்கு முக்கியமான காரணம் முதல் பாகம் கொடுத்த வெற்றிதான் சேனாபதி என்கிற அந்த கதாபாத்திரம் இன்னமும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது.
இந்திய பட வரவேற்பு:
மேலும் இந்தியன் முதல் பாகத்தின் பாடல்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பாடல்களாக இருக்கின்றன. இந்தியன் படத்தில் ஏ ஆர் ரகுமான் பாடல்கள் அதிகமாக மக்களால் கேட்கப்பட்ட பாடல்களாக இருக்கின்றன.
அப்படி இருக்கும் பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் அனிரூத்தை இசை அமைக்க வைத்தது ஏ ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் அதிருப்தியைதான் ஏற்படுத்தியது என்றாலும் கூட படத்தின் கதை நன்றாக இருக்கும் என்று ஒரு பக்கம் எதிர்பார்ப்புகளும் இருந்து வருகிறது.
இந்தியன் 2 திரைப்படத்தை எடுக்கும் பொழுது ஒரு பாகமாக எடுக்க தான் திட்டமிடப்பட்டது. ஆனால் அதன் கதை பெரிதாக இருந்ததால் மூன்றாம் பாகத்தையும் சேர்த்து எடுத்து விட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய கமல் இந்தியன் இரண்டாம் பாகத்தை விட மூன்றாம் பாகத்தின் மீதுதான் எனக்கு அதிக ஆர்வம் இருந்து வருகிறது என்று கூறியிருந்தார்.
இந்தியன் 2:
இதை நெட்டிசன்கள் பலரும் பேசும் பொழுது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் நல்லா இல்லை என்றும் மூன்றாம் பாகம்தான் நன்றாக இருக்கிறது என்றும் பேசியிருந்தனர். இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் கூறும் பொழுது ஆறு வருடம் எனக்கும் இயக்குனருக்குமான பயணம் நல்லபடியாக தான் சென்று கொண்டிருந்தது.
ஆனால் நான் பேசியதை குறித்து நீங்கள் மாற்றி எழுதியதால் இரவு எனக்கு போன் செய்து அவர் இது பற்றி கேட்க துவங்கி விட்டார். முதலில் கொடுத்த சாம்பார் சாதம் நன்றாகதான் இருக்கிறது என்றாலும் எனது மனம் பாயாசத்தை நோக்கி தான் செல்கிறது அதற்கு என்ன செய்ய முடியும் என்று கூறுகிறார் கமலஹாசன்.