எல்லாமே நீங்களே வச்சிக்கிட்டா எப்புடி? எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்க!.. ஓப்பனாக இளையராஜாவை கலாய்த்த கமல்ஹாசன்!.
Ilayaraja and Kamalhaasan: இளையராஜா இசையமைத்த பாடல்களில் எக்கச்சக்கமான பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இளையராஜாவை பொருத்தவரை இசையமைத்த எல்லா பாடல்களுமே அவரே இசையமைத்தது என்று கூற முடியாது.
சில படங்களுக்கு அப்போது அவரது தம்பி கங்கை அமரனும் இசையமைத்திருக்கிறார். இளையராஜாவிற்கு அதிகமான பட வாய்ப்புகள் வர துவங்கிய பிறகு பாடல் இசைப்பதில் கங்கை அமரனும் சேர்ந்து தான் பணி புரிந்தார்.

நாம் இளையராஜா இசையமைத்ததாக நினைக்கும் பல பாடல்கள் கங்கை அமரன் இசையமைத்ததாக இருக்கும். இதை கங்கை அமரன் கூட ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இதே போல கமல்ஹாசனும் நல்ல இசைஞானம் கொண்டவர்.
சினிமாவிற்கு வந்த காலம் முதலே அவருக்கு இசை மீது ஆர்வம் இருந்தது எனவே இளையராஜா இசையமைக்கும் பொழுது அவருக்கு சில ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்குவது உண்டு. இந்த நிலையில் ஒரு பிரபல பாடலுக்கு பின்னால் தான் வழங்கிய ஆலோசனை குறித்து கமல்ஹாசன் ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது புன்னகை மன்னன் திரைப்படத்தில் வரும் இசையானது கமல்ஹாசன் இளையராஜாவிற்கு கொடுத்த ஆலோசனையின் பேரில்தான் உருவானது என்று கூறியிருந்தார். அதனை கேட்ட இளையராஜா நீ சொல்லிதான் நான் அந்த இசையை இசையமைத்தேன் என்று கூறுகிறாயா என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் எல்லாமே நீங்களே வச்சுக்கிட்டா எப்படி எங்களுக்கும் எதுவாச்சும் வேண்டாமா என்று நக்கலாக பதில் அளித்து இருந்தார். அதற்கு இளையராஜா சிரிக்க துவக்கி விட்டார் அதாவது இப்படி மற்றவர்கள் உதவி செய்து இளையராஜா இசையமைத்த பாடல்களும் உண்டு என்பதை கமலஹாசன் அங்கு பதிவு செய்திருந்தார்.