இப்படியே சிரிச்சிட்டு இருந்தா உங்களை ஏமாத்திடுவாங்க!.. விக்ரமிற்கு வார்னிங் கொடுத்த கமல்!..
Biggboss tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் நிலைத்திருப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து போட்டி போட்டு தன்னை நிலைநிறுத்தி வருகின்றனர் போட்டியாளர்கள். ஆனால் எதுவுமே செய்யாமலே மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்து வரும் நபராக சரவணன் விக்ரம் இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது முதலே மக்களை கவரும் வகையில் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட தொடர்ந்து 70 நாட்களை கடந்த ஒரே போட்டியாளர் சரவணன் விக்ரம்தான். இந்த நிலையில் போன வாரம் மாயா பேசும்போது விக்ரமை கரப்பான் பூச்சி என பேசியிருந்தார்.

இந்த விஷயம் குறித்து கமல்ஹாசன் கேட்கும்போது விக்ரம் சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தார். இதை கண்ட கமல்ஹாசன் இப்படியெல்லாம் சிரித்துக்கொண்டிருந்தால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் விக்ரம். நீங்கள்தான் உங்கள் பிரச்சனைக்காக கேட்க வேண்டும் என விக்ரமிடம் கூறியுள்ளா கமல்.
மேலும் கமல் கூறும்போது ஒவ்வொருத்தரும் இன்னொருத்தருக்கு மாற்று பெயர் வைக்கிறீர்களே என கேட்டார். அதற்கு பதிலளித்த போட்டியாளர்கள் எதுவும் திட்டமிட்டு நாங்கள் பெயர் வைக்கவில்லை. அதுவாகவே வந்துவிடுகிறது என கூறியுள்ளனர்.
இதனை கேட்டு கடுப்பான கமல்ஹாசன் எனக்கும் கூட யாரும் பெயர் வைக்கவில்லை. திடீரென கமல்ஹாசன் என ஒரு பெயர் வந்துவிட்டது என கூறி அவர்களை நக்கல் செய்தார் கமல்ஹாசன்.