தமிழ்நாட்டிலேயே இவ்வளவு வசூலா.. காந்தாரா 2 படம் பண்ணுன சம்பவம்.!
பெரும்பாலும் வட்டார தெய்வங்களின் கதைகள் என்பது ஒவ்வொரு நிலத்திலும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் அய்யனார் வீரனார் மதுரை வீரன் மாதிரியான பல தெய்வங்களின் கதைகள் கிராமங்களில் சொல்லப்பட்டு வருகின்றன.
ஆனால் அவை யாவும் திரைப்படமாக எடுக்கப்பட்டது கிடையாது. ஆனால் அப்படியான சின்ன தெய்வங்களின் கதைகளை கூட ஒரு சிறப்பான படமாக மாற்ற முடியும் என்று நிரூபித்த திரைப்படம் தான் காந்தாரா.
கர்நாடகாவில் இருக்கும் வட்டார தெய்வமான பஞ்சூருளி என்கிற தெய்வத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுத்தப்பட்ட திரைப்படம் காந்தாரா. இந்திய அளவில் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை இந்த திரைப்படம் பெற்றுக் கொடுத்தது.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் இந்த திரைப்படத்தின் வெற்றி காந்தாரா 2 திரைப்படத்திற்கு ஒரு வழியை உருவாக்கியது. படத்தின் இயக்குனரான ரிஷப் செட்டி காந்தாரா 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
முதல் பாகத்தின் முந்தைய கதையாக காந்தாரா 2 இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் சீக்கிரத்திலேயே திரையரங்கிற்கு வர இருக்கிறது இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் பலரும் போட்டியிட்டு வருகின்றனர்.
இதனை பார்த்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹம்பாலே நிறுவனம் படத்தின் விலையை உயர்த்தி இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் 38 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம் காந்தாரா 2 திரைப்படம்.