keerthy suresh

கெட்ட வார்த்தைல பேர் வைக்கணும்னா இப்படி வைங்க!.. நிகழ்ச்சிக்கு சென்று அறிவுரை கூறிய கீர்த்தி சுரேஷ்!.

News Tamil Cinema News

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல் ஹிந்தியில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல youtube சேனலில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு நகைச்சுவையாக பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமிழில் “இது என்ன மாயம்” எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்தில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

keerthi suresh

தென்னிந்திய சினிமாவில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்த மகாநதி திரைப்படம் இவருக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்தது. மேலும் பலராலும் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்து வெளியாகிய படம் ரகு தாத்தா. ஹிந்தி திணிப்பிற்கு எதிரான சில கருத்துக்களையும், பெண் ஒடுக்கு முறைக்கு எதிரான சில கருத்துகளையும் கூறும் படமாக ரகு தாத்தா படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பு பலராலும் பாராட்டு பெற்று வந்த நிலையில் அவர் பிரபல youtube Cookd சேனலில் கலந்துகொண்டு நகைச்சுவையாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Youtube சேனலில் பேசிய கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் Cookd என்ற சேனலில் ஸ்பெஷல் கெஸ்டாக கலந்து கொண்டார். அந்த சேனலில் அவர் கலந்துகொண்டு அவர் ரகு தாத்தா படத்தில் நடித்த பல சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் உடன் ஆதித்யன் இருந்தார்.

keerthy suresh

அப்போது கீர்த்தி சுரேஷ் எனக்கு இந்த சேனலில்Tiger Fire Show அப்படி என்றால் என்ன என கேட்டார். அதற்கு ஆதித்தியன் நீங்கள் கண்டுபிடிங்கள். ஆனால் வெளியில் சொல்லாதீர்கள் எனக் கூறினார். அதற்கு கீர்த்தி சுரேஷ் எதுவும் கெட்ட வார்த்தையா? என கேட்டார் அப்படி சொல்ல முடியாது என அவர் மலுப்பினார்

ஒருவேளை இது கெட்ட வார்த்தையாக இருந்தால் நீங்கள் இந்த சேனலுக்கு worm Fire அப்படி தான் வைத்திருக்க வேண்டும் என நகைச்சுவையாக கூறினார். தற்போதைய இவர் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.