இப்ப மோதி பாத்துருவோம்..! – சீனாவில் கேஜிஎஃப்2 – ஆர்.ஆர்.ஆர் ரிலீஸ்?

கன்னட இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து வெளியான படம் கேஜிஎஃப் அத்தியாயம் 2.

Sultana
Social Media Bar

படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்து விட்ட போதிலும் இன்னமும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் கேஜிஎஃப் 2, இதுவரை உலக அளவில் ரூ.1000 கோடியை தாண்டி கலெக்சனை அள்ளியுள்ளது.

முன்னதாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படமும் உலக அளவில் 1000 கோடி வசூலை அள்ளியது. இரண்டு படங்களும் ஒரு மாத இடைவெளியில் வெளியாகி தொடர்ந்து பெரும் ஹிட் அடித்திருப்பது இந்திய சினிமாவையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது கேஜிஎஃப் 2 மற்றும் ஆர்.ஆர்,ஆர் இரண்டு படங்களுமே சீனாவில் வெளியாவதற்கான முயற்சியில் உள்ளது. முன்னதாக இந்தியாவில் வெளியான டங்கல், பாகுபலி உள்ளிட்ட பல படங்கள் சீனாவில் பெரும் வசூல் வேட்டையை நிகழ்த்தின.

தற்போது கேஜிஎஃப் 2, ஆர்.ஆர்.ஆர் இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் சீனாவில் வெளியானால் இரண்டு படங்களுக்கும் நடுவே கடும் போட்டி நிலவும் என்பதால் சீன ரிலீஸ் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.