KGF 2

எந்த படமும் முன்னாடி நிக்க முடியல..! – கேஜிஎஃப் 2 செய்த வரலாற்று ரெக்கார்ட்!

News

கன்னட இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து வெளியான படம் கேஜிஎஃப் அத்தியாயம் 2.

KGF 2

2018ல் கேஜிஎஃப் முதல் பாகம் வெளியானதிலிருந்தே இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான கேஜிஎஃப் 2 பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது.

படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்து விட்ட போதிலும் இன்னமும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் கேஜிஎஃப் 2, இதுவரை உலக அளவில் ரூ.1000 கோடியை தாண்டி கலெக்சனை அள்ளியுள்ளது.

மேலும் தற்போது இந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து வெளியான படங்களில் அதிகமாக கலெக்சனை அள்ளிய படமாக முதலிடத்தை கேஜிஎஃப் 2 பிடித்துள்ளது. முன்னதாக ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் அந்த இடத்தை பிடித்திருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை கேஜிஎஃப் 2 முறியடித்துள்ளது.