அவர் வில்லனா நடிச்சா?! கேஜிஎஃப் நடிகரை குறி வைக்கும் அஜித், விஜய் படங்கள்!

பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் விஜய் தனது “தளபதி 66” படத்தில் நடித்து வருகிறார். அதுபோல அஜித்தும் வலிமையை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத்துடன் “ஏகே 61” ல் நடித்து வருகிறார்.

Ajith Vijay

இதற்கிடையே சமீபமாக வெளியான கேஜிஎஃப் 2 இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசாத் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த இந்த படம் 1000 கோடி வசூலை தாண்டியுள்ளது.

இந்நிலையில் கேஜிஎஃப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு இந்திய அளவில் கிராக்கி எழுந்துள்ளது. புதிதாக உருவாகி வரும் பெரிய பட்ஜெட் படங்களில் இவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

விஜய்யின் தளபதி 66 வில் நடிக்க கேஜிஎஃப் படத்தில் அதீராவாக நடித்த சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது அஜித்தின் ஏகே61ல் நடிக்க கேஜிஎஃப் படத்தில் நடித்த ஜான் கொக்கனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜான் கொக்கன் கேஜிஎஃப்பில் அதீராவுக்கு அடியாளாக நடித்திருப்பார். இவரே சார்பட்டா பரம்பரையில் ஆர்யாவுக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Refresh