News
தளபதி 66 படம் ரிலீஸ் எப்போ..? – வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்!
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் “தளபதி66” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். உடன் சத்யராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் தொடங்கு மும்முரமாக நடந்து வருகிறது.
கிட்டத்தட்ட படப்பிடிப்பு பணிகள், இசையமைக்கும் வேலைகள் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 66 படத்தை 2023ல் பொங்கலில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் நீண்ட நாட்கள் கழித்து விஜய் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
