ஷூட்டிங்கில் கடுப்பேத்திய சிம்பு..- வார்னிங் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்..!

கே.எஸ் ரவிக்குமார் தமிழின் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். பல முக்கிய நடிகர்களை வைத்து சிறப்பான திரைப்படங்களை கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார். ஆனால் அவரையே ஒரு சமயம் கடுப்பாக்கியுள்ளார் சிம்பு.

2006 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சரவணா திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது கே.எஸ் ரவிக்குமாரை கோபமாக்கியுள்ளார் சிம்பு. அப்போதைய காலக்கட்டங்களில் பொதுவாகவே சிம்பு நேரத்திற்கு படத்திற்கு வர மாட்டார்.

இது பலருக்கும் தெரிந்த விஷயமே, சரவணா திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்திற்கும் கூட குறித்த நேரத்தில் வராமல் தாமதமாக வந்துள்ளார் சிம்பு. முதல் இரண்டு நாட்கள் இப்படியே நடந்தன.

Social Media Bar

மூன்றாவது நாள் கே.எஸ் ரவிக்குமார் சிம்புவை சந்தித்தார். தம்பி நான் இந்த படத்தை பண்ண முடியாது. நான் இதில் இருந்து விலகிக்கிறேன் நீங்க வேற ஆள வச்சி பண்ணிக்கோங்க என கூறிவிட்டார். அதை கேட்டதும் சிம்புவிற்கு அதிர்ச்சி.

ஏன் சார் என்னாச்சி என கேட்டுள்ளார். நான் காலைல ஏழு மணிக்கு ஹூட்டிங் வச்சா நீ 11 மணிக்கு வர்ற. ஒன்னு உனக்கு எந்த நேரம் சரியா இருக்கும்னு சொல்லு, அந்த நேரத்துல படப்பிடிப்பை வச்சிக்கலாம். அதை விட்டுட்டு நீ வர்ற வரைக்கும் எல்லோரும் எதுக்காக காத்துக்கிட்டு கிடக்கணும் என கோபமாக பேசியுள்ளார்.

அதன் பிறகு அனைத்து படப்பிடிப்புகளுக்கும் ஒழுங்காக வந்துள்ளார் சிம்பு. எனவே சிம்புவிடம் வேலை வாங்க தெரிந்த இயக்குனரால் மட்டும்தான் அவரை வைத்து படம் இயக்க முடியும் என கூறியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.