நான் 5 படத்துல பண்ணுனதை ஒரே படத்தின் சாதிச்சிட்டாரு… லோகேஷ் குறித்து பேசிய கே.எஸ் ரவிக்குமார்..!

Tamil Cinema News

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் எல்லாம் ஹிட் படங்களாக அமைந்து வருகின்றன.

பெரும்பாலும் இயக்குனர்களுக்கு அதிக ரசிகர்கள் உருவாவது கடினமான ஒரு விஷயம் ஆகும். ஆனால் லோகேஷ் கனகராஜுக்கு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக ரசிகர்கள் இருந்தார்கள். இப்போதைய நிலையில் லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தாளே அந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என்று கூறலாம்.

அந்த ஒரு இடத்திற்கு லோகேஷ் கனகராஜ் சென்று விட்டார். தற்சமயம் லோகேஷ் தான் நகராட்சி இயக்கத்தில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் குறித்தும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

lokesh

இந்த நிலையில் ஒரு மேடை நிகழ்ச்சியில் கே.எஸ் ரவிக்குமார் லோகேஷ் கனகராஜ் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் கமலின் மிகப்பெரிய ரசிகர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய கே.எஸ் ரவிக்குமார் கூறும் பொழுது நானும் கமலின் மிகப்பெரிய ரசிகன்தான் கமலை வைத்து ஐந்துக்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். ஆனால் அத்தனை படங்களில் நான் செய்த சாதனையை ஒரே திரைப்படத்தில் செய்துவிட்டார் லோகேஷ் கனகராஜ் என்று விக்ரம் திரைப்படம் குறித்து பேசி இருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.