பட்ஜெட்டை விட ரெண்டு மடங்கு அதிக லாபம்..! குடும்பஸ்தன் 5 நாள் வசூல் நிலவரம்.!
யூ ட்யூப்பில் பிரபல நிறுவனமான நக்கலைட்ஸ் குழுவின் முயற்சியில் குறைந்த பட்ஜெட்டில் உருவான திரைப்படம் குடும்பஸ்தன். குடும்பஸ்தன் திரைப்படத்தில் கதாநாயகனாக மணிகண்டன் நடித்திருந்தார்.
மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் இன்னும் பலர் நடித்திருந்தனர். பொதுவாகவே நடிகர் மணிகண்டன் சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்த கூடியவர். அப்படிப்பட்டவருக்கு தீனி போடும் வகையில் இந்த கதாபாத்திரம் அமைந்திருந்தது.
கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியான குடும்பஸ்தன் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. எனவே முதல் நாள் 1 கோடி வசூல் செய்திருந்தாலும் போக போக இந்த படத்தின் வசூல் என்பது அதிகரித்தது. அதனை தொடர்ந்து நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்தது.
தற்சமயம் வரை இந்த திரைப்படம் மொத்தமாக 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. வெளியான ஐந்தே நாட்களில் 10 கோடி ரூபாய் என்பது இந்த படத்திற்கு பெரிய வெற்றியாகும். ஏனெனில் படத்தின் பட்ஜெட்டே 3 இல் இருந்து 4 கோடிக்குள்தான்.
அப்படியிருக்கும்போது இந்த வசூலே கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.